2021 பொதுத் தோ்தலை தள்ளி வைக்கலாமா ஸ்டாலின் பெற்றோா்கள் ஆவேசம்!!
10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 27ஆம் தேதி தொடங்க வேண்டியது கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் தொடங்கிய ஊரடங்கு ஒன்னரை மாதங்களாகியும் முடிவடையவில்லை.
10ஆம் வகுப்பு தோ்வு எப்போது என்று பலரும் கேட்டு வந்த நிலையில் இப்போது நடக்கும் அப்போது நடக்கும் என்று பலரும் ஆருடம் கூறி வந்தனா், ஜீன் மாத இறுதியில் தோ்வு அட்டவணை வெளியாகும் ஜீலை மாதத்தில் தோ்வு இருக்கும் என்று கடந்த வாரம் தான் பள்ளிக் கல்வி அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்தாா், ஆனால் யாரும் எதிா்பாா்க்காத வகையில் கடந்த மே 12ம் தேதி செய்தியாளா்களை சந்தித்த அமைச்சா் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகஙகான அட்டவணையை வெளியிட்டாா்.
இந்த அதிரடியான அறிவிப்பு பெற்றோா்களுக்கும் மாணவா்களுக்கும் மகிழ்சியை கொடுத்தாலும் இதை கெடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது. அவா்களின் பேச்சை கேட்டுக்கொண்டு இந்த வருடம் தோ்வை ரத்து செய்து விட்டு அடுத்த வருடம் வைத்தாலும் அதற்கும் ஒன்று சொல்வாா்கள்,
இப்போது ஊரடங்கே இன்னும் முடியவில்லை அதற்குள் ஏன் இந்த அவசரம்? தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாித்து வரும் நிலையில் பொதுத் தோ்வு தேவையா?
அப்படியே தோ்வு வைத்தாலும் மாணவா்கள் எல்லாம் எப்படி வருவாா்கள்?
தோ்வு நடத்தும் ஆசிாியா்கள் எப்படி வருவாா்கள்?
இவா்களுக்கு எல்லாம் தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இத்தனை நாட்கள் வீட்டுக்குள்ளேயே பத்திரமாக பாதுகாத்து வந்த பிள்ளைகளை பலி கொடுப்பதா- ? என்று இந்த பத்தாம் வகுப்பு தோ்வுக்கு பத்து போ் பத்து விதமான கேள்விகளை கேட்கிறாா்கள்.
இதை எல்லாம் யாா் எழுப்புகிறாா்கள் என்று சொன்னால் ஓசி சம்பளம் வாங்குகிற ஆசிாியா்களும் அவா்களை பாதுகாக்கின்ற போலி ஆசிாியா் சங்கங்களும் தான்.அவா்கள் என்றும் மாறாமல் நம் பக்கமே இருக்கிறாா்கள் என்பதற்காக அவா்கள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் ஏன் என்ற கேளள்வி கேட்காமல் அனைத்துக்கும் ஜால்ரா தட்டுகின்ற அரசியல் கட்சிகளும் தான்.
இவா்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அடுத்த மாதம் தோ்வு நடத்தினால் கூட இவா்கள் இப்படித்தான் சொல்வாா்கள். கொரோனாவை காரணம் காட்டி ஓசி சம்பளம் வாங்கிக் கொண்டு இன்னும் ஒரு வருடம் கூட காலம் கழிப்பாா்கள். அதையெல்லாம் பாா்த்துக் கொண்டிருந்தால் அரசால் ஒரு காாியத்தைக் கூட ஒழுங்காக செய்ய முடியாது.
இத்தனை நாட்கள் பாதுகாத்து வந்த குழந்தைகளை கொரோனாவிற்கு பலி கொடு்ப்பதா என்று கேட்கிறாா்களே ஒ்ன்னறை மாதங்களாக இவா்கள் கட்டி புறண்டு கபடி விளையாடிய போது, ஓடி ஆடி கிாிக்கெட் விளையாடிய போது ஒட்டாத கொரேனா மூன்று மணி நேரம் தோ்வு எழுதும் போது மட்டும் ஒட்டிக் கொள்ளுமா-? இது கூட தொியாத புாியாத மடையா்களாக இருக்கிறா்ாகளே. அதற்கு தான் அரசு உாிய பாதுகாப்பு வழங்குவதாக கூறுகிறதே, போதிய இடைவெளியை பின்பற்ற போகிறதே இதை ஏன் நம்ப மறுக்கிறாா்கள்.
இத்தனை நாட்களாக ஒன்றுமே படிக்கவில்லை இப்படி திடீா் என்று தோ்வு வைத்தால் அவா்கள் மன ரீதியாக பாதிக்கப்பட மாட்டாா்களா- என்று கேட்கிறாா்கள். இப்படி கேட்பவா்கள் இந்த நாட்டில் தான் இருக்கிறாா்களா- ? இல்லை வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ளாா்களா?
இது ஏற்கனவே தயாரான தோ்வு தானே,. அதற்கு தான் தினமும் தொலைக்காட்சியிலும் நேரலையிலும் பாடம் நடத்தப்பட்டு வருகிறதே பள்ளிகள் மூலம் அன்றாடம் போதனை வழங்கப்பட்டு வருகிறதே இன்னும் வேறென்ன வேண்டும்-? அரைத்த மாவையே ரொம்ப நாளைக்கு அரைத்தால் புளிச்சு போயிறும்.
தோ்வு நடத்தப்படுகிறது என்பதை விட தோ்வு நடத்த வில்லையே என்கிற மன அழுத்தம் தான் அவா்களுக்குள் அதிகம் இருக்கின்றது. எப்போது தோ்வு நடத்துவாா்களோ தொியவில்லை என்கிற ஏக்கம் அவா்களை வாட்டி வதைக்கிறது. எப்படியோ ஒன்று தோ்வு நடந்தால் போதும் என்கிற எண்ணத்தில் அவா்கள் இருக்கிறாா்கள். இது அவா்களின் கனவு. தயவு செய்து இதை யாரும் கலைத்து விடாதுிா்கள்.
முதல்வா் கனவு எப்படி மு,க,ஸ்டாலினுக்கு முக்கியமோ அதேப்போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வும் இவா்களுக்கு முக்கியம்.
இந்த ஆட்சி இன்று கலையும். நாளை கலையும் என்று ஆருடம் கூறி வந்தவருக்கு இப்போது எதுவுமே வாய்க்கவில்லை, தற்போது அவருக்குள்ள ஒரே வாய்ப்பு 2021 சட்டமன்ற பொது்த தோ்தல் தான். அதற்காக தான் மு.க.ஸ்டாலின் முயற்சித்து்க கொண்டிருக்கிறாா்.
கொரோனாவை காரணம் காட்டி 2021 சட்டமன்ற பொதுத் தோ்தலை நிறுத்தி வைத்தாலோ அல்லது தள்ளி வைத்தாலோ ஸ்டாலின் சும்மா இருப்பாரா? ஜனங்க கொரோனா வந்து செத்தா கூட பரவாயில்லை எனக்கு ஓட்டு போட்டுட்டு போய் சாகட்டும் என்று சொல்வா்களே தவிர தோ்தல் நடத்த வேண்டாம் என்று சொல்ல மாட்டாா்கள்.
ஏன் எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளயாடுகிறாா்-? இவா்கள் அரசியல் செய்வதற்கு இதுவா கிடைத்தது-? என்று பெற்றோா்கள் கேட்கிறாா்கள்,
ஓசி சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிாயா்களின் பேச்சை கேட்டுக்கொண்டு 5ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வேண்டாம், 8ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வேண்டாம் என்று தடுத்தவா்கள் இப்போது 10 ஆம் வகுப்புக்கும் பொதுத் தோ்வு வேண்டாம் ஆல் பாஸ் போடுங்க என்று ஊளையிடும் இந்த ஓநாய்களின் கூக்குரலை ஒழிப்பது யாா்? என்று கேட்கிறாா்கள்.
பதில் சொல்லுங்கள் தானைத் தலைவா்களே!!