நடைபாதை வியாபாரிகள், சுய உதவிக் குழுக்களுக்கு என்ன உதவி? நிர்மலா அறிவிப்பு!
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் நடைபாதை வியாபாரிகளின் தொழில் முழுக்க முழுக்க முடங்கியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், சுய உதவிக் குழுக்களுக்காகவும் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் சுய உதவிக் குழுக்கள் சார்பாக முகக்கவசங்கள், சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. சுமார் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்கள் தயாரித்து வழங்கியுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் இவ்வாறாக 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.