எல்லாேருக்கும் இரண்டு மனைவிகள் இப்படியும் ஒரு கிராமம்?

 


எல்லாேருக்கும் இரண்டு மனைவிகள் இப்படியும் ஒரு கிராமம்?



ராஜஸ்தான் மாநிலம் பார்பர் மாவட்டம் இந்தியா-பாக் எல்லையில் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி வருகின்றனர்.


அந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று அவர்கள் பின்பற்றும் மத சடங்கு கூட இல்லை. இது இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம். இது மதங்களை கடந்து அனைவரிடமும் இருக்கிறது. அப்பகுதியில் முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தை தான் பின் பற்றுகின்றனர்.

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் முதல் முதல் மனைவியிடமிருந்து குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது. இது எந்தவிதமான மூட நம்பிக்கையோ தொியவில்லை.

அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அனைவரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்பதற்கே சற்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த கிராமத்தின் மீது ஒரு கண் வைப்பது அவசியம்.
 

 


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்