தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு!

தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு!




தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது பேருந்து போக்குவரத்தை நாளை முதல் செயல்படுத்தும் பொருட்டு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
 



மண்டலம் 1:

* கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்

மண்டலம் 2:

* தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

மண்டலம் 3:

* விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

மண்டலம் 4:

* நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

மண்டலம் 5:

 


* திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

மண்டலம் 6:

* தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி

மண்டலம் 7:

* காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு

மண்டலம் 8:

* சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இவற்றில் மண்டலம் 7 மற்றும் 8 ஆகியவற்றை தவிர்த்து மற்ற மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். மண்டலம் 7, 8க்கு உட்பட்ட பகுதிகளில்
 

பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கலாம். பேருந்துகளின் மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தடை தொடர்கிறது. பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்க நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு தனியாக வெளியிட உள்ளது. இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்