மிரட்டும் கல்குவாரி முதலாளிகள் _ மிரளும் டிராக்டர் தொழிலாளிகள்.

மிரட்டும் கல்குவாரி முதலாளிகள் _ மிரளும் டிராக்டர் தொழிலாளிகள்.



தேனியில் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த விலையை விட  மூன்று மடங்கு அதிக விலைக்கு கற்கள் எம்.சாண்ட் விற்கப்படுவதாக ஆட்சியரிடம் விசிகவினர் புகார் ....


      தேனி மாவட்டத்தில் பல்வேறு கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது . இக்குவாரிகள் மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கற்கள் ஜல்லிக்கற்கள் எம்.சாண்ட் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .


தற்பொழுது கட்டுமானங்களுக்கு தேவையான மணல் அரசு மணல் குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கடும் கட்டுப்பாடு ஏற்பட்டும் பிறவழிகளில் ஆற்று மணல் எடுத்தால் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாலும் சாமானிய மக்கள் முதல்  மிக பெரிய கட்டுமான நிறுவனங்கள் வரை தனியார் ஏஜெண்டுகளிடம்  எம்.சண்ட் ஜல்லிகற்கள் பெற்று வருகிறார்கள் மேலும் ட்ராக்ட்ர் வைத்து ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நபர்கள் தனியார் கல்குவாரி ஏஜென்ட் களிடம் இருந்து விலைக்கு பெற்று எம்.சாண்ட் ஜல்லிக்கற்கள் சப்ளை செய்து வருகின்றன .


மேற்படி ட்ராக்ட்ர் ஓட்டுனர்கள் &உரிமையாளர்கள் கல்குவாரி ஏஜென்ட் களை அணுகினால் அரசு நிர்ணயித்த விலையை விட மூன்று மடங்கு அதிகமகா கேட்டு மிரட்டி வருகிறார்கள் எனவும் 1 யூனிட்டுக்கு 4000 ரூபாய் வரை பெற்று கொண்டு ரூபாய் 1200 க்கு மட்டுமே ரசீது தருவதாகவும் இதனால் அரசுக்கு மிக பெரிய வருவாய் இழப்பு ஏற்ப்படுவதாகவும் தெரிந்த கூடுதல் விலை பெற்று கொண்டு மக்களை மிரட்டியும் வரி ஏய்ப்பு செய்து அரசையும் வஞ்சித்து லாபம் ஈட்டும் கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர் எனவும்  இதனால் ஏழை எளிய மக்கள் கட்டுமான பணிகளை தொடர முடியாமலும் ட்ராக்ட்ர் வைத்திருப்பவர்கள் எம்.சாண்ட் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த வாடகை செய்து பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன எனவும் மேலும் கொரோன நோய் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 1000 ரூபாய் வரை கல்குவாரி ஏஜென்ட் கள் விலை ஏற்றம் செய்திருப்பது மக்களையும் ட்ராக்ட்ர் வைத்திருப்பவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் இதனை தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் விசாரனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிகவினர் புகார் ஒன்றை அளித்து உள்ளனர் .


இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கல்குவாரி முறைகேடு பற்றிய புகார் கொடுக்கப்பட்ட டிராக்டர் வாகன தொழிலாளிகளுக்கு இனி கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மற்றும் சல்லிக்கற்கள் வழங்க கூடாது என மிரட்டி _ புகார் கொடுத்த வாகணங்களை புறக்கணிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு வழிகாட்டுதலை பின்பற்றாத கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்


தேனி மாவட்ட செய்திக்காக  அ வெள்ளைச்சாமி 9442890100


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்