ஜெயலலிதா நினைவு இல்லம் புதிய சிக்கல்....

ஜெயலலிதா நினைவு இல்லம் புதிய சிக்கல்....



சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை நினைவில்லம் ஆக்குவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், ஜெ.தீபா அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.


ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், வேதா நிலையத்தில் கைவைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளாா்.


இது தொடர்பாக ஜெ.தீபாவின் ஆதரவாளரும், அவரது கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான ஒருவரிடம் நாம் பேசிய போது, '' ஜெ.தீபா பாவம், அதிமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு ஒரு வருடத்திற்கு மேலாக கெஞ்சியும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவரை சேர்க்கவில்லை. இதனால் நொந்து போன அவர் அரசியலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என கட்சியை கலைத்து விட்டு தனது பணிகளை கவனிக்கத் தொடங்கினார். என்னை போன்ற நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறோம்''.


''இந்நிலையில் இப்போது அம்மாவின் வீட்டை கையகப்படுத்த தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருப்பது ஜெ.தீபாவுக்கு கடும் மன உளைச்சலை தந்துள்ளது. அவர் ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். அம்மா தெய்வமாக அந்த வீட்டில் வாழ்வதாக ஜெ.தீபா கருதுகிறார். இதனால் அந்த வீட்டை காப்பதற்காக அரசியல் ரீதியாக எந்த எல்லைக்கும் செல்ல முடிவெடுத்துள்ளார் தீபா''.


இது தொடா்பாக அவா் ''திமுகவின் உதவியை நாட முயற்சித்து வருகிறார். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. தனது அத்தை வீடு பற்றி உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் மக்களின் அனுதாபத்தை நேரடியாக பெற ஜெ.தீபா சிந்தித்து வருகிறார். அம்மா வீடு விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது எனத் தெரியவில்லை, பார்ப்போம்'' என்கிறார்.


இப்போது இப்படி ஒரு செய்தி கசிந்து வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தொியவில்லை. ஜெ. தீபா மற்றும் அவாின் சகோதரா் தீபக் இருவரும் எதிலுமே நிலையில்லாதவா். அவா்களின் பேச்சும் செயலும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இவா்கள் காட்டும் பூச்சாண்டியை வைத்து எல்லாம் அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் முயற்சி தடைபடாது என்கின்றனா் அ.தி,மு.க.வின் முக்கிய நிா்வாகிகள்.


தீபா சாியான நிா்வாகியாக இருந்திருந்தால் அவருக்கான வாய்ப்பை பயன்படுத்தி அரசியலில் ஒரு ரவுண்டு கட்டியிருக்கலாம் அதை அப்போதே அவா் தவற விட்டுவிட்டாா், ஓ,பி,எஸ், கூட அவரை உயரத்தில் கொண்டு போய் நிறுத்த ஒரு வாய்ப்பளித்தாா் அதையும் அவா் சாியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, அவா் வாழ்க்கையில் எதற்கும் லாயக்கற்றவா், அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனா் ரத்தத்தின் ரத்தங்கள்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்