பெரியகுளம் அருகே சுகாதார சீா்க்கேடு கண்டுகொள்ளுமா நகராட்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ பற்ற வைக்கின்றன இதனால் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கரைப்பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைத்து எரிக்கப்படுகின்றன.
இந்த தீ பற்ற வைக்கும் இடத்தில் பொதுப் பாதை உள்ளது .
இந்த பாதையில் அதிக அளவில் தீப்பற்றி எரியும் போது வெப்பம் அதிகளவில் காணப்படுகிறது. யாரும் அந்தப் பகுதியைக் கடக்க முடியவில்லை. மேலும் தீப்பற்றி எரியும் பொழுது அருகில் கரும்பு தோட்டம் வாழைத்தோட்டம் என்று விவசாய பயிர்கள் அதிகளவில் காணப்படுகின்றன. காற்று அதிக அளவில் அடிக்கும்போது இந்த விவசாய நிலங்களில் தீப்பற்றி எறிவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என்று இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் தீ பற்றி எரியும் போது அதிக அளவில் புகை மண்டலமாக இந்த பகுதி காணப்படுகின்றது .எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இதனால் அதிக அளவில் விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளன இதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தேனி மாவட்ட செய்திக்காக அ.வெள்ளைச்சாமி
9442890100