ஆரோக்கியமாக இருக்கிறேன் பாரதத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா..



ஆரோக்கியமாக இருக்கிறேன் பாரதத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பத்திரிகை செய்தி.


 

கடந்த சில நாட்களாக, சிலர் எனது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பல கருத்துக்களை பரப்பியுள்ளனர்.  எனது மரணத்திற்காக பலர் ட்வீட் செய்து பிரார்த்தனை செய்துள்ளனர்.

 

நாடு தற்போது கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது, நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற நிலையில் எனது வேலையில் இரவு வரை பிஸியாக இருந்ததால் நான் அதைக் கவனிக்கவில்லை.  ஆனால் இது என் கவனத்திற்கு வந்தபோது,​​அவர்களும் கற்பனை செய்து மகிழ்கிறார்கள் , அனுபவிக்கட்டும் என்று நினைத்து நான் எந்த பதிலும் கொடுக்கவில்லை.

 

ஆனால் எனது கட்சிக்காரர்கள், தொண்டர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர், அவர்களுடைய கவலையை என்னால் புறக்கணிக்க முடியாது. 

"நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு  எந்த நோயும் இல்லை" என்பதை இன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

இந்து மத நம்பிக்கைகளின்படி, இதுபோன்ற வதந்திகள் ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன என்று நம்பப்படுகிறது.  எனவே, இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் இது போன்ற அல்ப வேலையை விட்டுவிட்டு, என்னை வேலையைச் செய்ய விடட்டும், அவர்களும் தங்கள் வேலையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

 

நலம் விசாரித்த அனைவருக்கும், என் உடல் நலம் பற்றி கவலைப்பட்ட எனது நலம் விரும்பிகள், மற்றும் கட்சி தொண்டர்களுக்கும் நன்றி கூறுகிறேன். 

இந்த வதந்திகளை பரப்பியவர்கள் மீது எனக்கு எந்தவிதமான  துவேஷம் இல்லை.  அவர்களுக்கும் எனது நன்றிகள். 

-அமித்ஷா





 


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்