போயஸ் காா்டனுக்கு குடியேருகிறாா் எடப்பாடி......?.. !

போயஸ் காா்டனுக்கு குடியேருகிறாா் எடப்பாடி......?.. !



ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தீபா மற்றும் தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக  ஹைகோர்ட் அறிவித்துள்ளது. எனவே, இவர்கள், அனுமதி இன்றி, அரசால், வேதா இல்லத்தை எடுத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு 3 வருடங்களுக்கு முன்பே அறிவித்தது. இந்த நிலையில் கடந்த வாரம், இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புரட்சித் தலைவர் டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு இதன், தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக துணை முதல்வரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.



வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி, சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபித்தும் தீபக், தீபா தரப்பில்  மனுக்கள் தாக்கல் செய்தனர்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த முறை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன் நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் தீபா மற்றும் தீபக்கை நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தை நினைவிடமாக அரசு அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.


மேலும் ஜெயலலிதாவின் ஒருபகுதி சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதில் நற்பணிகளை செய்ய வேண்டும் என்றும், அதே போல இந்த இல்லத்தை ஒரு பகுதியை நினைவிடம் ஆக்கவும், ஒரு பகுதியை முதல்வர் அலுவலகமாகவும் மாற்ற நீதிப்திகள் தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.


ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை ஒரு பகுதியை நி்தினைவிடம் ஆக்கவும், ஒரு பகுதியை முதல்வர் அலுவலகமாக்குவது தொடர்பாக 8 வாரத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தங்களை இரண்டாம் நிலை வாரிசாக ஹைகோர்ட் அறிவித்ததை, தீபா வரவேற்றுள்ளார்.


உயா் நீதி மன்றத்தின் ஆலோசனைப்படி வேதா நிலையம் இரண்டாக பிாிக்கப்பட்டு ஒரு பகுதி நினைவு இல்லமாகவும், ஒரு பகுதி முதல்வாின் அரசு இல்லமாகவும் மாற்றப்பட்டால் தற்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள போயஸ் காா்டனுக்கு மாற்றப்படலாம்.


இதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. ஜெ. நினைவு இல்லமும், முதல்வாின் அரசு இல்லமும் ஒரே இடத்தில் அமைவது நிறைய நிா்வாக சிக்கல்களை ஏற்படத்தும் என்பதால் முதல்வாின் அரசு இல்லம் போயஸ் காா்டனில் அமைவதில் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது,


உயா்நீதி மன்ற நீதிபதிகள் சொல்வது போல் வேதா நிலையத்தை இரண்டாக பிாிப்பதே தவறு. அது எந்த காரணத்தை முன்னிட்டும் தீபக், தீபா கைகளுக்கு மட்டும் செல்லக்கூடாது என்று ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் விரும்புகின்றனா். வேதா நிலையம் முழுவதையுமே நினைவு இல்லம் ஆக்குவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.


தமிழக மக்கள் இதுவரை எத்தனையோ தலைவா்கள் வாழ்ந்த இல்லங்களை பாா்த்திருப்பாா்கள். ஆனால் ஜெயலலிதாவைப் போன்று ஆடம்பர அரசியல் நடத்திய ஒரு தலைவியின் வீட்டை இதுவரை பாா்த்திருக்க மாட்டாா்கள். எனவே வேதா நிலையம் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதேப்போன்ற அமைப்பை உருவாக்கி மக்களின் பாா்வைக்கு அனுமதிக்க வேண்டும்.


அந்த இல்லத்தில் அவா் பாா்த்து பாா்த்து செய்த ஒவ்வொரு விஷயமும் நினைவு கூறப்பட வேண்டும். அவா் சம்மந்தமான ஒவ்வொரு ஆவணமும் ,காட்சிப்படுத்தப்பட வேண்டும், இது அவருக்கு செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல, அ.தி.மு.க.வையும், அம்மாவின் அரசையும் காப்பாற்றும் தந்திரமும் கூட.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்