மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!!

மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம்!!




இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் என்டிடிவியிடம் கூறும்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு காரணமாக நிலுவையில் உள்ள 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும், என்றும் அதன் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் கள நிலவரத்தை பொறுத்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களின் கருத்துக்களால் அமைச்சகம் வழிநடத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருவதால், விரைவில் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து, ஜூன் மாதத்திலே மீண்டும் பள்ளிகள் துவக்கப்படும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. 


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் என்டிடிவியிடம் கூறும்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சத்தில் இருக்கும்போது, ​​ஜூலை மாதம் எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு, ஜூலை மாதம் என்ன நடக்கும் என்று எங்களால் கணிக்க முடியாது. உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.


"நிலைமை இயல்புக்கு மாறும் என்று நான் நம்புகிறேன், அவ்வாறு சரியாகவில்லை என்றால், நாங்கள் அமைச்சரவையையும், மாணவர், பெற்றோர்களையும் அணுகுவோம். அனைத்து பரிந்துரைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.



Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்