யாருக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர்! துறைவாரியாக ஒரு பார்வை!

யாருக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர்! துறைவாரியாக ஒரு பார்வை!




மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா வைரஸ் உதவித் தொகை பேக்கேஜ் தொடர்பாக பல முக்கிய விஷயங்களைச் சொன்னார். அதை துறை ரீதியாகப் பிரித்து, எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுத்து இருக்கிறோம்.


விவசாயம் முதல் வாடகை வீடு, மாத சம்பளதாரர்கள் வரை யாருக்கு என்ன சொன்னார் என்பதை விரிவாகப் பார்போம்.


விவசாயம்


1. விவசாயிகள் கடன்களுக்கான மானியம் (Interest Subvention) மே 31, 2020 வரை நீட்டிப்பு


2. 25 லட்சம், புதிய கிசான் க்ரெடிட் கார்ட்கள் மூலம் 25,000 கோடி கடன் கொடுத்திருக்கிறார்களாம்.


3. மார்ச் 01 - ஏப் 30 வரை 63 லட்சம் கடன்கள் வழியாக ரூ.86,600 கோடி கடன் கொடுத்திருக்கிறார்களாம்.


4. கூட்டுறவு & கிராம வங்கிகள் வழியாக ரூ.29,500 கோடி கடன் ரீஃபைனான்ஸ் செய்திருக்கிறார்களாம்.


5. 3 கோடி விவசாயிகளின் ரூ.4.22 லட்சம் கோடி கடனுக்கான தவணைகள் 3 மாதம் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.


6. 3 கோடி சிறு விவசாயிகளுக்கு, நபார்ட் வங்கி வழியாக ரூ.30,000 கோடி கூடுதலாக கொடுக்க இருக்கிறார்களாம்.


7. ரூ.30,000 கோடி கடன் மூலம் ராபி அறுவடைக்கும், கரிப் பயிரிடவும் உதவியாக இருக்கும் என்கிறது அரசு.


8. 2.5 கோடி விவசாயிகளுக்கு, ரூ. 2 லட்சம் கோடி Concessional Credit கொடுக்க இருக்கிறார்களாம்.


புலம் பெயர் தொழிலாளர்கள் & சுய உதவி குழு


1. புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ரூ.11,000 கோடி கொடுத்திருக்கிறார்களாம்.


2. அவர்களை தங்க வைப்பது, உணவு, தண்ணீர் போன்ற செலவுகளுக்கு இந்த 11,000 கோடியாம்.


3. புலம் பெயர் தொழிலாளர்கள், நகர் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு shelter home-ல் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறதாம்.


4. 1.87 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் வழியாக 2.33 கோடி நபர்களை சேர்த்து இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் வழியாக புலம் பெயர் தொழிலாளர்கள், அதிகம் பயனடைந்து இருக்கிறார்களாம்.


5. மார்ச் 15, 2020-ல் இருந்து, நகர் புற ஏழைகளுக்காக, 7,200 சுய உதவி குழுக்களை அமைத்து இருக்கிறார்களாம்.


6. 12,000 சுய உதவி குழுக்கள் வழியாக 3 கோடி மாஸ்குகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறாம்.


தொழிலாளர்கள்


1. இந்தியா முழுக்க, தொழிலாளர்களுக்கு ஒரே அளவு கூலி கொடுக்க, மத்திய அரசு ஆலோசனை.


2. தொழிலாளரை வேலைக்கு எடுத்தால் Appointment Letter, வருடம் 1 முறை மருத்துவ பரிசோதனை போன்றவை கட்டாயமாகுமாம்.


3. பெண்கள் இரவு ஷிஃப்ட் பணி செய்யவும் வழி வகை செய்யப்படுகிறதாம்.


4. 10 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் கம்பெனிகள் வரை ESIC நீட்டிக்க ஆலோசனை.


5. 10 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் சிறு நிறுவனங்களில் ESIC, voluntary- ஆக இருக்குமாம்.


ரேஷன் கார்ட் அறிவிப்புகள்


1. அடுத்த 2 மாதங்களுக்கு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க இருக்கிறார்களாம்.


2. ரேஷன் அட்டை இல்லா புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, 1 குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி/கோதுமை, 1 கிலோ பருப்பு வழங்கப்படுமாம்.


3. 8 கோடி புலம் பெயர் மக்கள் பயன்பெறும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.3,500 கோடி செலவழிக்க இருக்கிறதாம்.


4. 67 கோடி ரேஷன் அட்டை பயனர்கள், நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.


5. மார்ச் 2021-க்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமாம்.


வாடகை வீடு


1. புலம்பெயர் தொழிலாளர்கள் & நகர்புற ஏழைகள் குறைந்த வாடகையில் தங்கும் வசதிகளை PM Awas Yojana வழியாக, செய்ய திட்டம்.


2. ஆலைகள் & தொழில் துறையினர்கள், தங்கள் சொந்த நிலத்திலேயே மலிவு விலை வீடுகளை கட்ட அரசு ஊக்குவித்து வருகிறதாம்.


3. மெட்ரோ நகரங்களில் காலியாக இருக்கும் கட்டடங்களை வீடுகளாக மாற்ற ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.


4. Public Private Partnership மூலம் இந்த வேலைகளை செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.


வியாபாரிகள் & மாத சம்பளதாரர்கள்


1. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிசு கடன் வாங்கி இருப்பவர்களுக்கு 2 % வட்டி மானியம் நீட்டித்து இருக்கிறார்கள்.


2. 50 லட்சம் தெருக்கடை வியாபாரிகளுக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்பு கடன் திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள்.


3. இந்த புதிய கடன் திட்டம் மூலம் ஒரு தெரு கடை வியாபாரிக்கு 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்குமாம்.


4. ஆண்டுக்கு 3 - 18 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு, கடந்த மே 2017-ல் Credit Linked Subsidy Scheme அறிவித்தது அரசு.


5. இந்த திட்டம் 31-03-2020 வரை தான் இருந்தது. இப்போது 31-03-2021 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.


6. இந்த Credit Linked Subsidy Scheme-ல் சம்பளதாரர்களுக்கு குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்