திறமையே வெற்றியை கொடுக்கும்! தேனிசை தென்றல் தேவா!!

திறமையே வெற்றியை கொடுக்கும்! தேனிசை தென்றல் தேவா!!








தன் இசை உலக பயணம் பற்றி, பிரபல இசையமைப்பாளர் தேவா: மாங்காடு சொக்கலிங்கம் தேவ நேசன் ஆகிய நான், 'தேவா' என்று சுருக்கமாக, அழைக்கப்படும் முன், பல பெயர்களைப் பரிசீலித்தது உண்டு. மனசுக்கேத்த மகராசா படத்தின், டைட்டில் கார்டு போடும் போது, 'இசை சி.தேவா' என்று இருந்தது.அதை பார்த்த, 'மக்கள் நாயகன்' ராமராஜன், 'அண்ணே, 'தேவா'ன்னு இருக்கட்டும்; சி.தேவான்னு சொல்றது சரியாக இல்லை; தேவா என்பதே நல்லா இருக்கு' என்றார். நான், தேவா ஆனது இப்படி தான்!


அதிர்ஷ்டம் என்பது, ஒருவரின் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் ஒட்டியிருக்கும். இதை உணர்ந்தவர் தோற்றதில்லை. வெற்றி பெற்றவருக்கும், பெறாதவருக்கும் சின்ன வித்தியாசம் தான். வெற்றி பெற்றவரிடம், ஏதேனும் ஒரு நல்ல குணம் இருக்கும். தோற்றவரிடம் ஏதேனும் சின்ன குறையிருக்கும். திரையுலகைப் பொறுத்தவரை, திறமையில்லாதவர்கள் முன்னேறவே முடியாது. குறிப்பாக, இசை துறையில், சங்கீத ஞானம் மட்டுமல்ல, இசையின் பரிமாணங்களும், அவற்றின் நுட்பங்களும் தெரிந்தால் தான் பாடல்கள் வரும்.


என் பாடல்கள், மக்களை சென்றடைய துவங்கியதும், பெரிய பட நிறுவனங்களால் கவனிக்கப்பட ஆரம்பித்தேன். ஆர்.எம்.வீரப்பனின், 'சத்யா மூவிஸ்' படங்களில் பணி புரியத் தொடங்கியதும், இறைவனின் கருணை பார்வை என் மீது பட்டது.ஏ.வி.எம்., ஸ்டூடியோவில், ஒரு படத்தின் பின்னணி இசை சேர்ப்பில் இருந்த போது, 'தேவா உங்களுக்கு போன்' என்று, ஆபரேட்டர் வந்து சொன்னார். 'ஹலோ...' என்றேன். 'தேவா, நான், இயக்குனர் பாலசந்தர் பேசுகிறேன்...' என்ற குரலைக் கேட்டதும் ஒரு படபடப்பு.'குட் மார்னிங் சார், சொல்லுங்க சார்...' என்றேன். 'என் படத்துக்கு நீ மியூசிக் பண்ணணும்பா' என்றார். 'படத்தின் ஹீரோ யார் தெரியுமா; ரஜினிகாந்த்...' என்றார். இன்ப அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.


இன்ப அதிர்ச்சி மேல், இன்ப அதிர்ச்சி. பாலசந்தர் பேனரில், சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு இசை நான். இது கனவா; நிஜமா என, என்னை நானே, கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.நன்றி தெரிவித்து, போனை வைத்து விட்டு வந்த பிறகும், சந்தோஷம் குறையவில்லை. சந்தனம் போல, அதன் மணம் பெருகியது. தம்பிகளிடம், அப்பா, அம்மாவிடமும், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். அண்ணாமலை படத்தில் இருந்து தான், டைட்டில் கார்டில், ரஜினிக்கு, 'சூப்பர் ஸ்டார்' என்று போட ஆரம்பித்தனர். அந்த டைட்டிலுக்கும், அண்ணாமலை படத்துக்கு நான் போட்ட, 'தீம் மியூசிக்'கைத் தான், இப்ப வரை, ரஜினி படத்திற்கு வைக்கிறாங்க; அது மகிழ்ச்சியே!








 


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்