பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் எப்போது கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் தளர்வு மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. முதல் தளர்வு வரும் ஜூன் 8ம் தேதி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே அமலுக்கு வரும். இதில் இரண்டாவது கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படும். அதன்படி இரண்டாம் கட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மட்டும் இந்த தளர்வு கொண்டு வரப்படும். மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு இந்த முடிவை எடுக்கலாம்.
ஜூலை மாதத்தில் இப்படி கல்வி நிறுவனங்களை இயக்க தொடங்கலாம். ஆனால் இதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. ஜூலை மாதத்தில் இந்த தளர்வு வரும் என்பதால் இப்போதைக்கு, கல்வி நிறுவனங்கள், தேர்வுகள் எதுவும் வர வாய்ப்பு இல்லை.