மாநிலங்களுக்கு இடையே.. இ-பாஸ் தேவையில்லை..மத்திய அரசு சொல்வது என்ன?

மாநிலங்களுக்கு இடையே.. இ-பாஸ் தேவையில்லை..மத்திய அரசு சொல்வது என்ன?




மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆனால் இதில் மாநில அரசுகள் சொந்தமாக முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த தளர்வில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இடையே மக்கள் செல்ல எந்த விதமான தடையும் கிடையாது. இதற்கு இ- பாஸ் அல்லது வேறு விதமான அனுமதிகளை பெற வேண்டிய அவசியம் கிடையாது.


ஆனால், மாநில அரசுகள் இதில் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவும் நிலையை வைத்து, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்.

 

மாநிலங்களுக்கு இடையில் மக்கள் பயணம் செய்வது தொடர்பான வழிமுறைகளை அந்த மாநில அரசுகளே வெளியிடலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை. சரக்கு வாகனங்களை இயக்க மாநில அரசுகள் தடை விதிக்க முடியாது.

 

இது எப்போதும் போல மாநிலங்களுக்கு இடையே தொடரும். சர்வதேச விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும். பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.


 


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்