இறுதி கட்ட ஊக்குவிப்பு அறிவிப்பு.. யாருக்கு என்ன சலுகை..! என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்.
கடந்த நான்கு தினங்களாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனது இறுதி கட்ட பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் பற்றி அறிவித்து வருகிறார். அதனை பற்றி முக்கிய அறிவிப்புகளைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
ஏற்கனவே பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது உதவிகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் பல சீர்திருத்தங்கள் பற்றி விவரித்து வருகிறார்.
இதுவரை 16,394 கோடி ரூபாய் 8.19 விவசாயிகளுக்கு நேரடியாக சென்று அடைந்துள்ளது. அதோடு 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் 10,025 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன மூலம் அவர்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். மேலுமம் கட்டுமானம் மட்டும் கட்டுமானத் தொழிலாளார்களுக்கும் நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் மக்கள் வேலையிழந்து வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு உணவு தானியங்கள் இலசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கம் முகாம்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பு வைக்கப்பட்டு வரும் நிலையில், 85% செலவுகளை அரசால் ஏற்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக மா நிலங்களுக்கு 4,113 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறைக்கு பின்னர் பிரதமர் ஏற்கனவே 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.
சர்வதேச அளவிலான இந்த நெருக்கடியில் இருந்து நாம் மிஈண்டு வருவோம். தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்காடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நேற்று, நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் வெளியாக உள்ளன.