திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்...  -மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்...  -மு.க.ஸ்டாலின்



திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், துரைமுருகன் அளித்த ராஜினாமா கடிதம் மீது எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக சட்ட விதி 18-ன் கீழ் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். காரணம் பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இருந்ததால் தன்னிடம் இருந்த பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகினார். அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துவிட்டார்.


இதனிடையே துரைமுருகனை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு கடந்த மார்ச் 29-ம் தேதியன்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொடர்பான பதற்றம் அதிகரித்ததை அடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது.


இன்னும் எத்தனை மாதங்கள் கொரோனாவின் தாக்கம் இருக்கக்கூடும் என்பது யாருக்கும் தெரியாது. தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது இன்னும் 3 மாதங்களாவது ஆகக்கூடும் எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில் இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுக்குழுவை கூட்ட முடியாத அசாதாரண சூழல் நிலவுவதாகவும், இதனை கருத்தில்கொண்டு தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் திமுக சட்ட விதி 18-ம் கீழ் துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், திமுக பொதுக்குழு கூடும் வரையில் துரைமுருகன் பொருளாளர் பதவியில் நீடிப்பார் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். துரைமுருகன் சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் போது அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவி மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தது. இனி வரும் நாட்களில் திமுக பொருளாளர் என்கிற அந்தஸ்தில் துரைமுருகனின் அறிக்கைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்