கொரோனா தேவதைகள்:  செவிலிய சகோதரிகள்!

கொரோனா தேவதைகள்:  செவிலிய சகோதரிகள்!




மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்றால் அது மிகையாகாது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியம், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு மகத்தான சேவையாற்றுபவர்கள் செவிலியர்கள்.

 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் மகத்தான பணியை செவிலியர்கள் செய்து வருகிறார்கள். தங்களது குடும்பம், கணவன், குழந்தைகள் என அனைவரையும் பரிதவிக்க விட்டு, பரவும் கொடிய நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையை விட்டு எங்கும் செல்லாமல், கண் இமைக்காமல் பரிவுடன் கவனித்து வருகிறார்கள் செவிலியர்கள்.

அந்த வகையில், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமுதா (52), முத்துமீனா (50), தவமணி (48) ஆகிய சகோதரிகள் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். மூத்தவரான அமுதா இருதயவியல் துறையிலும், குடும்ப கட்டுப்பாடுத் துறையில் முத்து மீனாவும், லேபராஸ்கோபி துறையில் தவமணியும் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கல் அதிகரித்த நிலையில், கொரோனாவுக்கான முதல் பலி மதுரையில் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் முதன்முதலாக அமுதா பணியமர்த்தப்பட்டுள்ளார். தொடக்க நாட்கள் மிகவும் சவாலாக இருந்தது என தெரிவிக்கும் அமுதா, எல்லோரையும் போல எங்களது பாதுகாப்பு தொடர்பாக அச்சம் இருந்தது. ஆனால், வழக்கமான பணிதான் என்று நினைத்து பின்னர் அது பழகி விட்டது. பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து பணியாற்றுவது சவாலாக இருந்த போதும், எங்களுக்குத் தேவையானதை மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுத்தது என்றார்.


 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சகோதரிகள் முத்துமீனா, தவமணி ஆகியோரும் கொரோனா வார்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, சகோதரிகள் மூன்று பேரும் ஒன்றாக இணைந்து கொரோனா நோயாளிகளை அர்பணிப்புடன் கவனித்து வந்துள்ளனர். குறிப்பாக, நோயாளிகளுக்கு மன ரீதியான ஒத்துழைப்பு தேவை என்பதை அறிந்த சகோதரிகள், அவர்களுடன் உரையாடி ஊக்கமளித்துள்ளனர்.

 

தொடர்ந்து, சகோதரிகளின் பணி முடிந்து 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானவுடன் அவர்களது சொந்த கிராமமான பேச்சிகுளத்துக்கு திரும்பியுள்ளனர். சகோதாரிகளான தாங்கள் மூவரும் இணைந்து செய்த பணி தங்களுக்கு திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்துள்ள அமுதா, வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அளித்த உற்சாக வரவேற்பு தங்களை நெகிழ்ச்சியில் ஆழ்தியதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் அரசு மருத்துவமனையில் இருந்து வருபவர்களை வேறு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருந்தது. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது மகிழ்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

சகோதரிகளின் தாயார் செல்லம்மாளும் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகியுள்ளார். காச நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக செல்லம்மாள் விருதும் பெற்றுள்ளார். தங்களது தாயை பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டதால்தான் செவிலியராகும் எண்ணம் தங்களுக்கு வந்ததாக தெரிவிக்கும் சகோதரிகள், தங்களுடன் அவர் செலவழித்த நேரத்தை விட பணியில்தான் செலவழித்தார் என்று நெகிழ்சிபட தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் மூவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூத்த சகோதரியான தனலட்சுமி (57) குடும்ப தலைவியாக இருக்கிறார். இவர்களது 85 வயதான தந்தை ராமநாதனும் இவர்களுடன் வசித்து வருகிறார். அமுதாவின் மகள் தனது தாயின் கணவை நிறைவேற்றும் பொருட்டு, மருத்துவராகும் ஆசையுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 











Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்