மத்திய அரசின் ரூ.3 லட்சம்  கடன் வாங்குவது எப்படி?

மத்திய அரசின் ரூ.3 லட்சம்  கடன் வாங்குவது எப்படி?



சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதோடு, கோடிக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருக்கிறது. ஆனால் இத்துறையினர் சந்திக்கும் பிரச்சினையும் நிதி நெருக்கடியும் குறைந்தபாடில்லை. பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, கொரோனா என திடீரென மேற்கொள்ளும் சீர்திருத்தங்களாலும் பேரழிவுகளாலும் அதிக நெருக்கடிக்கு உள்ளாவது இந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர்தான். இந்தத் துறை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் அத்துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து
Guaranteed Emergency Credit Line என்ற அவசர காலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம். சிறு குறு தொழில்முனைவோர்கள் அதிகபட்சமாக ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை சிறு குறு நிறுவனங்கள் இத்திட்டத்தில் கடன் வாங்கலாம். 2020 பிப்ரவரி 29 காலத்தில் இருக்கும் கடன் நிலுவைத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அது போகக் கூடுதலாக 5 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம்.

இந்த அவசர காலக் கடன் திட்டத்தின் வழியாகச் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுக்கும் கடன் தொகைக்குத் தேசிய கடன் உறுதி அறக்கட்டளை நிறுவனம் 100 சதவீத உத்தரவாதம் வழங்கும். அதேபோல, இந்தக் கடன் திட்டத்தின் கீழ் முதலில் கொடுக்கப்படும் 3 லட்சம் கோடி ரூபாய் அல்லது 2020 மே 23 முதல் அக்டோபர் 31 வரையிலான காலத்தில் கொடுக்கப்படும் கடனுக்கு 100 சதவீத உத்தரவாதம் வழங்கப்படும். முக்கியமாக,2020 பிப்ரவரி 29 நிலவரப்படி, ரூ.25 கோடி வரை கடன் வைத்திருப்பவர்கள் மற்றும் 2019 - 20 நிதியாண்டில் ரூ.100 கோடிக்குள் விற்றுமுதல் வைத்திருப்பவர்கள் மட்டுமே அவசர காலக் கடன் திட்டத்தின் கீழ் கடன் வாங்க முடியும்.



 




இக்கடனை வங்கிகளில் வாங்கினால் 9.25 சதவீதமும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கினால் 14 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இத்திட்டத்தின் வழியாக வாங்கும் கடனுக்கான கால அளவை 4 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்