50,000 ரூபாய் கடன்! வதந்தியை உண்மையாக்கிய தமிழக அரசு!

50,000 ரூபாய் கடன்! வதந்தியை உண்மையாக்கிய தமிழக அரசு!




மே மாதத் தொடக்கத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வலம் வந்தது. அதாவது ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் வங்கிகளில் ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற செய்தி வைரலாகப் பரவியது. இந்திய அரசே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

 

கொரோனா பீதியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரேஷன் அட்டைகளுக்குக் கடன் வழங்குவதாகக் கூறப்பட்டது.

ராஷ்ட்ரீய சிக்‌ஷித் பெரோஜ்கார் யோஜானா திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவரின் ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற இச்செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

ஆனால் இத்திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை எனவும், இச்செய்தி வதந்தி எனவும் பின்னர் உறுதியானது. ராஷ்ட்ரீய சிக்‌ஷித் பெரோஜ்கார் யோஜானா இணையதளத்தில் இத்திட்டம் குறித்த தகவல் இருந்தது. ஆனால் அது ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும், முதல் 40,0000 பயனாளர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் போன்ற தகவல்கள் இருந்தன.

இந்நிலையில் தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதி வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். அதன் பின்னர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.

 

அதோடு பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்.

விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக அரசு உறுதியளித்தது.

 

ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு விவசாயம், சிறு கடைகள், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்குத் தமிழக அரசு அனுமதி கொடுத்து, நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.

இதையெல்லாம்விட தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது ரூ.50,000 கடன் உதவித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வரும் நிதிப் பகிர்வில் மட்டும் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.


 




Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்