ஆந்திர மாணவர்களின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.முதல்வர் ஜெகன் மோகன்.....!
இந்தியாவில் தற்போது அனைவராலும் விரும்ப கூடிய ஒரு முதல்வராக ஜெகன் மோகன் உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் கூட இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருப்பதை சமூக வலை தளங்களில் பார்க்க முடிகிறது. ஆந்திர மாநிலத்தின் முதல்வர் அரியணையில் ஏறிய உடனேயே ஜெகன் மோகன் பல்வேறு அதிரடியான திட்டங்களை கொண்டு வந்தார்.
அவற்றுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்களுடைய திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக ஆந்திராவில் தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வெளியான அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது மாணவர்களுக்கு உதவக்கூடிய திட்டம் என்பதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்காக ஆந்திரா முழுவதும் புது கல்லூரிகள் தொடங்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைகழகத்துடன் அவை இணைக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.