பெரியகுளம் பகுதியில் அதிக கட்டணம் வசூல்...! கண்டுகொள்ளுமா போக்குவரத்துத்துறை...!!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் டாடா மேஜிக் அதிக அளவில் உள்ளன. இந்த வாகனங்கள் தேனியிலிருந்து பெரியகுளம் வழியாக அல்லிநகரம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி போன்ற இடங்களில் இடைநிறுத்தம் உள்ளன.. சராசரி அரசு பேருந்தில் பெரியகுளம் டு தேனிக்கு 13 ரூபாய் வசூலிக்கப்படுகின்றன.
ஆனால் தற்போது இந்த டாடா மேஜிக் வாகனத்தில் செல்வதற்கு 30 முதல் 40 ரூபாய் கேட்கின்றனர்.
மேலும் வண்டியில் ஏறச் செய்து விட்டு இறங்கும் போது அந்த பயண கட்டணத்தை கேட்பதால் மக்கள் திணறி வருகின்றனர்.
இதனால் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்
மேலும் இந்த பகுதியில் டாடா மேஜிக் வாகணம் அதிகளவில் ஓடுவதால் அதிகளவான வண்டிகளில் இன்சுரன்ஸ் பெர்மிட் ஒருசில வண்டிகளில் இருப்பதில்லை
இதனால் ஒரு விபத்து ஏற்பட்டாலும் நஷ்ட ஈடு வாங்குவது பெரும் சிரமம் ஆகி வருகின்றன
மேலும் அதிக பயணக் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பெரிதும் மனம் வருத்தப்படுகின்றனர் இதற்கு மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிய குளம் மற்றும் தேனியிலிருந்து பயணம் செய்யும் பொது மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனா்.
தேனி மாவட்ட செய்திக்காக
தேனி மாவட்ட நிருபர்
அ.வெள்ளைச்சாமி