பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு - ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர்
கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முருகானந்தத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பதிலாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கபட்டு உள்ளார்.
அதேபோல், பீலா ராஜேஷிற்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும்வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீலா ராஜேஷின் இடமாற்றம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளர்.
கொரனா காலத்தில் சிறந்த தலைமையாக செயல்பட்டவர், பல மாவட்டங்களில் கொரனாவை கட்டுப்படுத்த காரணமானவர் பீலா ராஜேஷ் என பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே தனது பதிவை அவர் நீக்கிவிட்டார்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது, பொது முடக்கத்தை நீட்டிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவில் முக்கிய நபர் பிரதீப் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.