தெருவோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம்!

தெருவோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம்!




பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக சிட்பி இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி நியமிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியும் (சிட்பி) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தை சிட்பி நடைமுறைப்படுத்தும்.
 


கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உறுதி நிதி அமைப்பின் லமாகக் கடன் உறுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு துவக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த இணையதளம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

 

ஆவணங்களைப் பதிவு செய்வது முதல் அனைத்து வழிமுறைகளுக்குமான தளமாக இது இருக்கும். இதற்கான அலைபேசி செயலி ஒன்றும் சிட்பி வங்கி சார்பில் உருவாக்கப்படவுள்ளது. பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் போன்ற அனைத்து கடன் வழங்கும் அமைப்புகளும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

 

பயிற்சியளித்தல், திறன் வளர்ப்பு, திட்ட நிர்வாகம், இணையதள நிர்வாகம், தகவல் தொடர்பு, வங்கி சார்ந்த நடவடிக்கைகள், வங்கி சாரா நிதி நிறுவன அமைப்புப் பணிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக அந்தந்தத் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் கொண்ட திட்ட மேலாண்மை அமைப்பையும் சிட்பி வங்கி ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் ஸ்வநிதி திட்டம் செயல்படுத்தப்படும் 2022 மார்ச் மாதம் வரையில் இந்த அமைப்பு செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


 





Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்