Google Payவில் பணம் அனுப்புவது ஆபத்தானதா?
வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைப் போடுவதும் எடுப்பதும் வாடிக்கையாளர்களுக்குச் சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் பரிவர்த்தனை முறையை வங்கிகள் அறிமுகப்படுத்தின. ஏடிஎம், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற சேவைகள் வங்கி வாடிக்கையாளர்களிடையே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் மொபைல் செயலிகள் வாயிலாகப் பணம் அனுப்பும் வசதி வந்தபிறகு வாடிக்கையாளர்களுக்கு இன்னும் இலகுவாக இருந்தது.
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகப் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு அனுப்ப முடிந்தது. இதுமட்டுமல்லாமல், போன் ரீசார்ஜ், டி.வி. ரீச்சாா்ஜ், மின் கட்டணம் உள்ளிட்ட மற்ற வசதிகளுக்கும் மொபைல் ஆப்களை மூலம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கினர்.
இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகப் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு அனுப்ப முடிந்தது. இதுமட்டுமல்லாமல், போன் ரீசார்ஜ், டி.வி. ரீச்சாா்ஜ், மின் கட்டணம் உள்ளிட்ட மற்ற வசதிகளுக்கும் மொபைல் ஆப்களை மூலம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கினர்.
இதனால் வங்கிச் சேவைகளை விட மொபைல்போன் வாயிலான பரிவர்த்தனைகளே அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மக்களிடையே இன்னமும் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. அனுப்பும் பணம் சென்று சேருமா சேராது என்ற சந்தேகம் பலரிடம் இருக்கிறது.
போன் ரீச்சாா்ஜ் செய்தாலும், மின் கட்டணம் செலுத்தினாலும் சில சமயங்களில் கூகுள் பேவில் பணம் எடுக்கப்பட்டு விடும் ஆனால் உரிய கட்டணம் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று சேராததால் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. இப்படி சில தவறுகள் நேரும் பட்சத்தில் சில சமயங்களில் பணம் திரும்ப நமது கணக்கிற்கே வந்து விடுகின்றது. ஆனால் பல சமயங்களில் அந்த பணம் எந்த கணக்கிற்கு செல்கின்றது என்கிற விவரம் தொியாமல் மொத்தமாக பணத்தை இழக்கின்ற நிலையும் ஏற்பட்டு விடுகின்றது,
மொபைல் பரிவர்த்தனைச் சேவையில் முன்னிலையில் இருக்கும் கூகுள் பே செயலி மீது இதுபோன்ற புகார்கள் வந்தன. கடந்த சில வாரங்களில் கூகுள் பே பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாக இல்லை என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
அதற்கு கூகுள் பே நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. கூகுள் பே பரிவர்த்தனைகள் அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, தேவையான வழிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்று கூகுள் பே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கூகுள் பே செயலியானது அங்கீகாரமற்றது என்ற குற்றச்சாட்டையும் அந்நிறுவனம் மறுத்துள்ளது. அதன் பரிவர்த்தனைகள் 2007 பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றே நடைபெறுவதை ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது என்பதையும் கூகுள் பே நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவறுகள் நடந்தால் உாிய அத்தாட்சியுடன் தொடா்பு கொண்டால் பிரச்சனை தீா்த்து வைக்கப்படும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.