வெட்டுக்கிளிகளை அழிக்க புது கருவி – சேலம் இளம் விஞ்ஞானி சாதனை


வெட்டுக்கிளிகளை அழிக்க புது கருவி – சேலம் இளம் விஞ்ஞானி சாதனை



கொரோனவே இன்னும் முடியாத நிலையில் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை அளித்து வருகின்றன,இதுவரை தமிழ்நாட்டிற்குள் வராத வெட்டுகிளிகள் எப்பொழுது படையெடுக்கும் என தெரியாது எனவே அதற்கு முன் தயாராக இருக்க சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் வெட்டுக்கிளிகளை அழிக்க மின்வலை பொறி வடிவமைத்துள்ளார்.

 


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் வசித்து வரும் டிரைவர் சுரேஷ்குமார்.இவரது மனைவி ரேவதி.இவர்களது மகன் உதயகுமார் (வயது 19).உதயகுமார் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3ம் வருடம் படித்து வருகிறார்.


இவர் குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின் வலை பொறி கருவியை தயாரித்துள்ளார்.தற்போது பல மாநிலங்களில் பயிர்களை தின்று அழிக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நிலம் நாசமாகும் ஆபத்து உள்ளது.


அதனால் குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பாதுகாப்பான கருவியை தயாரித்து உள்ளேன்.வெட்டுக்கிளிகள் குறிப்பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது. அதனால் சிறு குண்டு பல்பு, அதை சுற்றி வெட்டுக் ளிகள் நுழையும் அளவு இடைவெளியுடன் இரு அடுக்கு கம்பி வலை அமைத்து அதில் மின் இணைப்பு கொடுத்துள்ளேன்.


இதை வயல்களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்துவிடும். இக்கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக்கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.


தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இதுபோன்ற கருவிகளை வைத்தால் 4 நாட்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அழிக்கப்படும்.


கருவியின் அடிப்பரப்பில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்தால் இறந்த வெட்டுக்கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதே போன்று நிறைய கருவிகளை செய்து தர தயாராக உள்ளேன். அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும். என்று கோாிக்கை வைத்துள்ளாா் உதயகுமாா். அரசு செவி சாய்க்குமா...?





Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்