ஸ்டாலினையும், கமலையும் கலாய்க்கும் செல்லூா் ராஜீ
"ஸ்டாலினுக்கு இருக்கிறது வாடகை மூளை.. சொந்த மூளை அவருக்கு இல்லை.. ஏன்னா, எந்த விஷயத்தை பாராட்டணும், எந்த விஷயத்தை எதிர்க்கணும் என்றுகூட தெரியாமல் இருக்கார்.. வாடகை மூளை இருக்கவேதான் அப்படியெல்லாம் பேசுறார்" என்று திமுக தலைவரை அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் செய்துள்ளார்.
மதுரை வில்லாபுரம், தூய மரியன்னை மேல் நிலைப்பள்ளி பகுதியில் நிவாரண உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினர்.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள் அடங்கிய பைகளை அமைச்சர் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, ஜெ.அன்பழகன் குறித்த அதிமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கும், அரசை குறை சொல்லி கமல் அளித்த பேட்டி குறித்த கேள்விக்கும் பதிலளித்தார்.. திமுக தலைவரையும், மநீம தலைவரையும் கிண்டல் செய்தவாறே தன்னுடைய பதில்களை அமைச்சர் கூறியிருந்தார். அவர் சொன்னதாவது:
"ஒன்றிணைவோம் வா திட்டத்தினை நிறைவேற்றுகிறோம் என கூறிய ஸ்டாலின் வீட்டிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி பாதுகாப்பாக இருந்து விட்டார். இவர்கிட்ட நல்ல பேரு வாங்கணும்னு சொல்லி பலர் களப்பணியில் இறங்கிவிட்டனர்.. இப்படி களப்பணி ஆற்றி தான் எம்எல்ஏ அன்பழகன் மறைந்து விட்டார்... இதுக்கு நாங்க உண்மையிலேயே வருத்தப்படறோம்.
இதெல்லாம் ஒரு அரசியல்.. எதில் எதில் அரசியல் பண்ணணும், எதில் எதில் ஒத்துழைப்பு தரணும்னு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவே இல்லை.. எந்த விஷயத்தை பாராட்ட வேண்டும், எந்த விஷயத்தை எதிர்க்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார். ஏன்னா, அவருக்கு இருப்பது சொந்த மூளை இல்லை, வாடகைக்கு அமைக்கப்பட்ட மூளை என்ன சொல்லுதோ அதன்படி இப்படி பேசுகிறார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு, சாலை மார்க்கமாகவும் ரயில் மூலமாகவும் வரும் எல்லாருமே டெஸ்ட் செய்யப்படுகிறார்கள்.. கமல் தன்னுடைய கட்சியில் இருக்கும் 100 நிர்வாகிகளை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே அரசை பற்றி குறை சொல்லி கொண்டு இருக்கிறார்.
ஏன்னா, அரசை பற்றி குறை சொல்லி பேசினால் தான் டிவியில் அவரை காட்டுவார்கள்.. கமல் என்ன எதிர்பார்க்கிறார் என்றே தெரியவில்லை.. சினிமா ஷூட்டிங்கில் நடிப்பது போல கட்டிபிடி வைத்தியம் செய்யணும்னு எதிர்பார்க்கிறாரா... கமல் சொல்றதை போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை. அரசை குறை சொல்ல முதலில் கமலுக்கு எந்த யோக்கிதையும் இல்லை" என்றார்.