காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவா். பதவியேற்பு விழாவுக்கு தடை?

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவா். பதவியேற்பு விழாவுக்கு தடை?



ஜூலை மாதம் 2ம் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவராக பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார். ஆனால் இந்த விழாவிற்கு கர்நாடக அரசு அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது.


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக, முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.


கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் விமரிசையாக அவரால் விழா நடத்தி பதவியேற்க முடியவில்லை. கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டபோதிலும், எடியூரப்பா அரசு, 2 முறையும் அனுமதி தர மறுத்துவிட்டது. கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். ஆனால், பர்சனல் நண்பரான சிவகுமாருக்கு, பன்சனலாகவே போன் போட்டுள்ளார் எடியூரப்பா.


உங்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அரசின் ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.


எனவே, ஜூலை மாதம் 2ம் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். ஆனால், இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. இதனால் இன்னும் பரபரப்புதான் நீடித்து வருகிறது.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்