இந்திய ஐடி ஊழியர்களின் கனவை கலைக்க போகிறாரா டிரம்ப்.. பிரச்சனை தான் என்ன..!
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்கர்களுக்கு தான் முதல் உரிமை. அமெரிக்க பொருட்களுக்கு முதல் உரிமை, வேலை வாய்ப்புகளிலும் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என தொடர்ந்து கூறி வருகிறார். இதனை தற்போது சில விஷயங்களில் அமல்படுத்தவும் தொடங்கி விட்டார்.
அதிலும் அவர் சொல்கின்ற ஹெச் 1 பி விசா சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் முதலாவதாக பாதிக்கப்பட போவது இந்தியா தான். இந்திய ஐடி ஊழியர்கள் தான். இவர்கள் மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்களுக்கும் இது பாதிப்பு தான், ஏன் சொல்லப்போனால் இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி கண்டன.
ஹெச் 1 பி விசாவை தடை செய்ய ஆலோசனை சரி ஹெச் 1 பி விசாவால் ஏன் இந்தியர்களுக்கு ஏன் பாதிப்பு, ஹெச் 1 பி விசா எதற்காக? வாருங்கள் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவிலேயே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹெச்1 பி விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். ஆக டொனால்டு டிரம்ப் அரசு ஹெ1 பி விசா தடை செய்வதை பற்றி ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கத்தினால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக அமெரிக்காவில் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா மக்களை காப்பாற்றுவதற்காக, வெளி நாட்டினர் அமெரிக்காவில் குடியேற தற்காலிகமாக தடை விதிக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியுரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. இவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.
அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியுரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. இவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.
இந்த ஹெச்1 பி விசாக்கள் பெரு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன. H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.
இவ்வாறு இந்த விசாக்களை தடை செய்வதன் மூலம், அவர்களின் வாய்ப்பானது அமெரிக்கர்களுக்கு முதலில் வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இது வழிவகுக்கும் என்றும் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வாதிட்டு வருகிறது. மேலும் இந்த நிலையில் ஹெச் 1 பி விசாவுக்கான கட்டணத்தினை 460 டாலரிலிருந்து 20,000 டாலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக இதன் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து புலம் பெயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் டிரம்பி இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.