சென்னையில்  கொரோனாவின் ஆட்டம் இனிமேதான்ஆரம்பமாம்... அதிர்ச்சி தகவல்!!

சென்னையில்  கொரோனாவின் ஆட்டம் இனிமேதான்ஆரம்பமாம்... அதிர்ச்சி தகவல்!!




நாடு முழுவதும் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளோவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எழும் வகையில், கொரோனாவுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை எகிறி கொண்டிருக்கிறது.
இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து தினமும் 1,000 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு, கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசிடம் அண்மையில் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை, பொதுமக்களை மேலும் கலக்கமடைய செய்துள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்!அதில், " சென்னையில் கொரோனா பாதிப்பு நிலை இப்படியே தொடர்ந்தால், ஜூலை 15 ஆம் தேதிக்குள் இங்கு 1.5 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 1.3 லட்சமாக இருக்கும். அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் கொரோனா பரவல் இங்கு புதிய உச்சத்தை தொடும்" என்று அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இருப்பினும், இறப்பு விகிதம் 1 - 1.5 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்