வந்தாரை வாழ வைத்த தமிழகம், திரும்பி வருவாா்களா வட மாநில தொழிலாளா்கள்....?

வந்தாரை வாழ வைத்த தமிழகம், திரும்பி வருவாா்களா வட மாநில தொழிலாளா்கள்....?



பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் சிறு நகரங்களில், நிரந்தரமாகக் குடியேறிய வட இந்தியர் ஒருவரைப் பார்ப்பது சற்று அரிதான ஒன்றுதான்.


ஆனால், சமீப காலங்களில் சில குக்கிராமங்களில் கூட வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.


ஆரம்பக் காலங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிய வந்த அவர்கள் தற்போது, தமிழ்நாட்டிலும் பிற தென்னிந்திய மாநிலங்களிலும் தொழிற்துறைகளில் மட்டுமல்லாது உணவகம், விடுதி, முடி திருத்தகங்கள் விவசாயம்  என அனைத்துத் துறைகளிலும், கட்டுமானத் துறையிலும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மனித வளமாக உருவாகிவிட்டனர்.


பெரும் அளவில் இல்லாவிட்டாலும் தென்னகத்தின் வயல்களிலும், தோப்புகளும் அவர்கள் வேளாண்மைத் தொழிலாளர்களாக இருப்பதையும் காண முடிகிறது.


அவர்கள் தமிழநாட்டுக்குள் வரத்தொடங்கிய காலகட்டத்தில், தமிழகத்தின் வாய்ப்புகள் பறிபோகும் என்று ஒரு சாரார் கவலை தெரிவித்தனர். ஆனால், கொரோனாமுடக்கநிலை காரணமாக வடமாநிலத் தொழிலார்களில் கணிசமானவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் தொழில்கள் இயங்குவது பாதிக்கும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.


இதனால் தமிழக  ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மொழி ரீதியான இனவுணர்வு, விவாதப் பொருளாக இருந்தது.


மொழி ரீதியான இனவாதம் பேசும் ஒரு குறிப்பிட்ட சாரார் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தமிழ் மீதான பற்றை மட்டுமல்லாது பிற மொழிகள் மற்றும் மக்கள் மீதானவெறுப்பையும் வெளிப்படுத்தத் தொடங்கினர்.


கடந்த காலங்களில்  சமூக ஊடங்கங்களில் தொடர்ச்சியாகப்  தினக்கூலித் தொழிலாளர்களாக வெளிமாநிலங்களில் இருந்துதமிழகம் வருவோர் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாகக் கூறி விமர்சிக்கப்பட்ட பதிவு பலவற்றை பாா்த்திருப்பீா்கள்.


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அமலாக்கிய ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் திரும்ப வராவிட்டால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று  தொழிற்துறையினர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.


"புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதும், திரும்பி வருவதும் வழக்கமான ஒன்றுதான். திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்குத்திரும்புவதைப் போல, கொரோனா ஊரடங்கால், அவர்கள் இப்போது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.


தற்போது சந்தைத் தேவை குறைவாக உள்ளதால் தொழிற்துறை உற்பத்திகளும் அதற்கேற்ப குறைந்துள்ளன. இனி வரும் மாதங்களில் சந்தை பழைய நிலைக்குவரும்போது உற்பத்தியும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்கிறார்கள்  தொழிற்துறையினர்.


அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு வந்தவர்கள். அவர்களில் கணிசமானவர்கள், இப்போதுஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். மீண்டும் தொழில் நடவடிக்கைகள் தொடங்கும்போது வடமாநிலங்களுக்கு சென்றவர்கள் தென்னிந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுபவா்களும் இருக்கிறாா்கள்.


தங்கள் நிறுவனங்களின் முதலாளிகளால் நன்றாக நடத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதிகள் சீரானதும் திரும்பி வந்து விடுவார்கள். ஆனால், மோசமாக நடத்தப்பட்டவர்கள் உடனடியாகத் திரும்ப யோசிப்பார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியான அழுத்தங்கள் கடுமையான பின்பே அவர்கள் வரவாய்ப்புண்டு. ஆக மொத்தம் தொழில் செய்பவர்களில் கெட்டவர்கள் யார் என்பதைக் கொரோனா கட்டிக்கொடுத்துவிட்டது, .


இருக்க இடமும், உண்ண உணவும் இல்லாமல் நடந்தே ஊர் திரும்ப முடிவெடுத்தவர்களும் உண்டு. பிற மாநிலங்களை விடவும், தமிழகத்தில் இருந்து அவ்வாறு செல்லமுற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், தமிழ்நாட்டிலும் அது நடந்தது.


புலம்பெயர் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் முறைசாரா தொழில்களில் இருப்பவர்கள். அவர்களுக்கு நிறுவனங்கள் மூலம் உணவு, உறைவிடம், ஊதியம் எனஎதையும் பெற இயலாது.


அப்படிப்பட்டவர்கள்தான், உதவ ஆளின்றி, கடுமையான இன்னலுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு பகுதியினர் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம்உதவிபெற்றனர்.


'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று பெயர் பெற்ற தமிழ்நாடு இந்த ஊரடங்கு சமயத்தில் அந்தப் பெயரைக் காப்பாற்றியதா என்பது, நிலைமை சீரடைத்ததும் வடமாநிலங்கள் சென்ற தொழிலாளர்கள் எவ்வளவு விரைவாகத் திரும்புகிறார்கள் என்பதன் மூலம் தெரியவரும்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்