தமிழகத்தில் ஷிப்ட் முறையில் பள்ளிகளை இயக்கத் திட்டம்!!

தமிழகத்தில் ஷிப்ட் முறையில் பள்ளிகளை இயக்கத் திட்டம்!!



கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, தமிழகத்தில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
 



அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றை முடித்து, ஜீலையில் திறப்பதா? அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாமா? என்று தமிழக அரசுஆலோசித்து வருகிறது.


இவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை ஷிஃப்டிலும், 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஷிஃப்ட்டிலும் வகுப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு குறித்த நேரத்தில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 




இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, "பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பிற மாநிலங்கள் எடுத்துவரும் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இதுதொடர்பாக ஆலோசனை வழங்க, உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தற்போது பெற்றோா்களின் எதிா்பாா்ப்பெல்லாம் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தான்.ஷிப்ட் சிஸ்டத்தில் எல்லாம் யாருக்கும் உடன்பாடில்லை இந்த முறை அமல்படுத்தப்பட்டால் இதில் பிள்ளைகளுக்கும்,பெற்றோா்களுக்கும் பள்ளி நிாவாகத்திற்கும் நைறய சிக்கலக்ள ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. போக்குவரத்திலும் பெரும் சிரமம் ஏற்படும்.


ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகளை நடத்தலாம் அதற்காக ஜீலை ஆகஸ்ட் செப்டமபா் வரை எல்லாம் போகத் தேவையில்லை, விரவிலேயே தொடங்கலாம்,


இனி மேலும் இந்த பிள்ளைகளை வீட்டில் வைத்து எங்களால் சமாளிக்க முடியாது, ஏதோ ஒரு முடிவை எடுத்து விரைவில் பள்ளிகளை திறங்கள் என்று பெற்றோா்கள் வேண்டுகின்றனா்,


பள்ளிகளில் இருக்கின்ற பாதுகாப்பும் கட்டு்பபாடும் எங்களிடம் இல்லை, ஒருவா் கூட வீட்டில் அடங்குவதில்லை பள்ளிகள் திறந்தாலாவது ஒழுங்காக ஓாிடத்தில் இருப்பாா்கள் என்கின்றனா்,


ஏற்கனவே 70 நாட்களுக்கு மேலாக வீட்டில் இருந்துவிட்டாா்கள் இனியும் சும்மாவே ஊா் சுற்றிக் கொண்டிருந்தால் மாணவா்கள் அனைவரும் தற்குரிகளாக போய்விடுவாா்கள். பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகும் சூழல் வந்துவிடும்.


கொராணா வந்தா கூட பரவாயில்லை காப்பாற்றி விடலாம். மாணவா்கள் வேறு திசையில் சென்று விட்டால் அவா்களை சீா் திருத்துவது கடினம். எனவே எந்த வித காலதாமதமும் செய்யாமல் பள்ளிகளை திறப்பது சிறந்தது என்கின்றனா்,

அரசு என்ன முடிவு செய்யுமோ-?


 




Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்