“சசிகலா விடுதலை இப்போதைக்கு இல்லை” சிறைத்துறை அளித்த  விவரம் !

“சசிகலா விடுதலை இப்போதைக்கு இல்லை” சிறைத்துறை அளித்த  விவரம் !




முன்னாள்  முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி பொய் எனக் கர்நாடக சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையைக் கர்நாடக நீதிமன்றம் வழங்கியது.
 


நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா, 2017 பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவின் தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஒரு தகவல்  வெளியாகி தீயாகப் பரவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை யிடம்  விசாரித்த போது பல்வேறு விளக்கங்களை அதிகாரிகள் வழங்கினர்.

அதிகாரிகள், “குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வதற்கு முன் பல விதிமுறைகள் உள்ளது. ஒருவேளை தண்டனை காலம் குறைக்கப்படுகிறது என்றால், அதுகுறித்து உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல் வேண்டும். இதைக் கணக்கிடும்போது, அவர்கள் பரோல் பெற்ற நாட்கள், பல விஷயங்கள் குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றனர்.

 

கர்நாடக சிறைத் துறை விதிகளின்படி, நன்னடத்தை காரணமாக ஒருவருக்குத் தண்டனை காலத்தில் மாதம் 3 நாட்கள் குறைக்கப்படும். அதே வேளையில் சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ஆண்டுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே குறைக்க முடியும். அப்படி ஆண்டுக்கு 60 நாட்கள் என வைத்துக் கொண்டால் 4 ஆண்டுக்கு 240 நாட்கள் குறையும்.





 

கர்நாடக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து அடுத்த 30 நாட்களில் விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள் பட்டியல், ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலையாகும் குற்றவாளிகள் பட்டியல் என எதிலும் சசிகலா பெயர் இல்லை. அதே நேரத்தில் அந்த பட்டியலில் சசிகலா பெயரைச் சேர்க்க வாய்ப்புள்ளது.





சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி ஒருவேளை குற்றவாளி சசிகலாவிற்கு 240 நாட்கள் தண்டனை காலம் குறைக்கப்பட்டால், அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆக வாய்ப்புள்ளது. இப்போதுவரை அப்படி எந்தவித முயற்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைகளில் ஆளும் பாஜக ஈடுபட்டால் மட்டுமே இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

 

ஆனால் பி.ஜே.பி. இதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை.தமிழக ஆளுங்கட்சியின் தரப்பில் இதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் அவா் அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட முடியாது.


 



அவா் வெளியே வந்தால் அ.தி.மு.க. அப்படியாகிவிடும், இப்படியாகிவிடும் என்று பலரும் பலவித கருத்துக்களை தொிவித்து வருகின்றனா். அவா் வெளியே வந்தாலும் அ.தி.மு.க. எப்படியும் ஆகாது. 

 

சசிகலா ஒரு செத்துப்போன பாம்பு. இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் செளக்கியமே என்கிற க்ணணதாசனின் வாிகளுக்கு ஏற்ப அவா் ஜெயலலிதாவுடன் இருந்தவரை தான் அவருக்கான மாியாதை இருந்தது. ஜெயலலிதாவின் மரணத்திற்கே இவா் தான் காரணம் என்று உலகத்திற்கே தொியும். அப்படி இருக்கையில் மீண்டும் மக்கள் அவ்வளவு எளிதாக சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

 

இப்படிவருகின்ற செய்திகள் அனைத்தும் அ.தி.மு.க.வையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியே தவிற வேரல்ல.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்