ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் லடாய் !! தி.மு.க.விற்கு அடுத்த ஆபத்து,,,,?

 ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் லடாய் !! தி.மு.க.விற்கு அடுத்த ஆபத்து,,,,?



10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் எதை செய்தாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அலைமோதுகிறார்.


அதில் ஒன்றுதான் அரசியல் வியூக வகுப்பாளர் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துனத்துடன் 380 கோடியில் ஒப்பந்தம் செய்தது. அதிலிருந்து ஸ்டாலினை வழிநடத்துவது எல்லாம் இந்த கிஷோர் தான்.. ஆனால் தற்போது பிரசாந்த் ஐபேக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தீர்ப்பதே ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக உள்ளதாம்.


தற்போது கொரோனாவால் "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தை அறிமுகம் செய்த பிரசாந்த் கிஷோர் அதன்மூலம் உதவி செய்து திமுக ஆதரவு அல்லாத ஓட்டுக்களையும் கவரும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டு அதற்கு ஐபேக் நிறுவனத்துடன் அந்தந்த மாவட்ட செயளாலர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனைந்து பணியாற்ற ஏதுவாக ஐபேக் நிறுவனத்தால் ஸ்டாலினிடம் ஒப்புதலும்  வாங்கப்பட்டதாம்.


இந்தநிலையில் உதவி கோரிய மக்களின் தகவல்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பபட்டு, நிவாரணம் முறையாக சென்றதா என உதவிகோரிய மக்களை தொர்புகொண்டு ஐபேக் நிறுவனம் கேட்டதில், பெரும்பாலனோர் நிவாரணம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்ததையடுத்து, அதை ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்ற ஐபேக் நிறுவனம், ஒரு கட்டத்தில் திமுகவினரை அதட்டி வேலை வாங்கும் அளவுக்கு தங்கள் அதிகாரத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.


இதனால் கடும் கோபமான திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐபேக் நிறுவனத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலினிடம் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளனர். இது இப்படியே தொடர்ந்தால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த ஸ்டாலின், ஒட்டுமொத்த திமுகவினரும் ஐபேக் நிறுவனத்திற்கு எதிராக இருப்பதால் ஒப்பந்தத்தை இதோடு முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.


இதுவரை அந்நிறுவனத்திற்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து 80 கோடி கொடுத்தாக கூறப்படுப்படுகிறது, ஆகையால் இனி இவர்கள் வேலை செய்தது போதும் போகச் சொல் என்று ஐபேக் நிறுவனத்தை திமுகவுடன் இனைத்து விட்ட அந்த முக்கிய இடைதரகரிடம் கூறியுள்ளார் ஸ்டாலின்.


அந்த முக்கிய புள்ளியும் இந்தகவலை பிரசாந்த் கிஷோரிடம் தெரியப்படுத்த அதற்கு பிரசாந்த் கடுமையான கோபத்தில் "என்ன விளையாடுகிறார்களா, போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும், ஒப்பந்தம் போடும்போதே சொல்லப்பட்டதுதான் என்றும் ஒப்பந்தந்தில் இதுவும் ஒரு விதிதான் என்றும், திமுகவின் மொத்த தகவலும் என் கையில இருக்கு,  ரத்து செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? என்று பிரசாந்த் கிஷோர் அவரிடம் எச்சரித்திருக்கிறராம்..


அதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளராம் ஸ்டாலின், இந்நிலையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 15 லட்சம் பேருக்கு உதவினோம், 20 லட்சம் பேருக்கு உதவினோம் என்று தி.மு..க. தரப்பில் சொல்லப்பட்டதெல்லாம் வெறும் ரீல் தானா..? என்று பொது மக்கள் கேட்கத் துவங்கியுள்ளனா்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்