12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவுகள் எப்போது ? – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
12ம் வகுப்பு மறுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 34,482 மாணவர்களுக்குள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 718 +2 மாணவர்களுக்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தமிழக அரசு ஜூலை 13 ஆம் தேதி வெளியிட்டது.
இன்று செய்தியர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் அவர்கள் 12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் மேலும் தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.