அரசியலுக்கு குட்பை...! ரஜினியின் ரகசியம்....!!

அரசியலுக்கு குட்பை...! ரஜினியின் ரகசியம்....!!




ரஜினியின் அரசியல் வருகை குறித்த தகவல்களால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இதோ வருகிறார் அதோ வருகிறார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார்.


 

1996ஆம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டுவந்த ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், தற்போது வரை கட்சி தொடங்கப்படவில்லை. இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்ற தகவல்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.

இதனிடையே, ரஜினியின் நெருங்கிய நண்பரும், அவரது அரசியல் ஆலோசகர் எனக் கூறப்படுபவருமான தமிழருவி மணியன், “ஏப்ரல் மாததில் ரஜினி கட்சி தொடங்குவார் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படும் எனவும், மாநாட்டைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வார்” எனவும் அறிவித்தார். அதேபோல், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, காராத்தே தியாகராஜன் போன்றோரும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.








இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, “ரஜினிக்கு ஏற்கனவே அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை பெற்று மறு அவதாரம் எடுத்து வந்துள்ளார். எனவே, கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் அறிவுரையின்படி ஷூட்டிங் கூட செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அரசியல் அறிவிப்புக்காக அவர் வகுத்து வைத்திருந்த திட்டமும் கொரோனாவால் முடங்கி போனது” என்றனர்.

இந்த சூழலில், கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, பழைய மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது, ஏராளமானோர் கூடும் இடங்களுக்கு செல்ல கூடாது. ஒருவேளை சென்றால் உடல் நலம் பாதிக்கும் என்று தற்போது மருத்துவர்கள் ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.





இது தொடர்பாக தனது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுடன் ரஜினி ஆலோசனை செய்த போது, அரசியல் எல்லாம் வேண்டாம். நிம்மதியான வாழ்க்கைதான் இப்போது முக்கியம். அரசியல் தவிர வேறு வழிகளில் கூட சேவை செய்யலாம். உடல் நலன் தான் முக்கியம் என்று பாசத்துடன் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, அரசியல் வேண்டாம் என்ற முடிவை ரஜினி எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.










Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்