இந்தியாவின் தடையை உடைக்குமா டிக்டாக்..?

இந்தியாவின் தடையை உடைக்குமா டிக்டாக்..?




இந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், நிறுவனத்தின் தலைமை இடத்தை லண்டனுக்கு மாற்ற பணிகள் நடந்து வருகிறது.

சீனாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு சில கிடுக்கிப்பிடி சட்டம் போட்டுள்ளது. குறிப்பாக, அரசுக்கு தேவையான மின்னணு தகவல்களை தடையின்றி தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
இந்த சட்டத்தின்படி டிக்டாக் உள்பட சீன நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தும் நபர்கள் குறித்த ரகசிய தகவல்களை சீன அரசு எளிதாக பெற்றுக் கொள்ளலாம். இதை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக மத்திய அரசு டிக்டாக் ஆப்பிற்கு தடை விதித்தது.

உலகம் முழுவதும் டிக்டாக் ஆப் பிரபலமானது. இந்நிலையில் இந்திய அரசின் இந்த தடை நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவும் தடை விதிக்க திட்டமிட்டு வருகிறது. சீன ஆப் என்பதாலே இந்த நெருக்கடிகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த டிக்டாக் நிறுவனம், தலைமை இடத்தை வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது.

இதற்காக இங்கிலாந்தில் உள்ள லண்டனை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் டிக்டாக் நிர்வாகம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேறு நாட்டிற்கு  டிக்டாக் நிறுவனம் மாற்றப்பட்டால் விரைவில் இந்தியாவில் இதற்கு தடைவிலக்கு பெற வாய்ப்புள்ளதாம். அப்படி தடை விலக்கு பெற முடியவில்லை என்றாலும், வேறு பெயரில் மீண்டு வரலாம் என வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


 



எதற்கும் முற்றுப்புள்ளி என்பது இல்லை. படினமாக முயற்சித்தால், மாற்றி யோசித்தால் இவ்வுலகில் எதுவும் சாத்தியமே என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.



Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்