ஊரடங்கு காலத்தில் ஈசியாக தமிழகம் வந்து சென்ற ஸ்வப்னா... இ-பாஸ் வழங்கிய அதிகாரிகளை தேடும் என்ஐஏ!!

ஊரடங்கு காலத்தில் ஈசியாக தமிழகம் வந்து சென்ற ஸ்வப்னா... இ-பாஸ் வழங்கிய அதிகாரிகளை தேடும் என்ஐஏ!!




கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில், அந்த மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்துவந்த ஸ்வப்னா சுரேஷ் மூளையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரையும், அவரது நண்பரான சந்தீப்பையும், என்ஐஏ 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
 

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்வப்னாவை சில தினங்களுக்கு முன்தான் என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் கைது செய்தனர்.

ஆனால் அதற்கு முன் அவர் திருவனந்தபுரத்தில் இருந்து தென்காசி மாவட்டம், செங்கோட்டைக்கு காரில் ரகசியமாக வந்துள்ளார். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு போகும் வழியில் ஒரு பெண்ணிடமும் பேசியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் என்ஐஏ அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளது.

 

ஸ்வப்னா சந்தித்து பேசிய அந்தப் பெண் யார், செங்கோட்டையில் ஸ்வப்னா சந்தித்த நபர் யார், ஊரடங்கு காலத்தில் அவர் ஏன் தமிழகம் வர வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியமாக, தமிழகத்தில பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், இறப்பு, மருத்துவ தேவைகள், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் என தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் வழங்கப்படுகிறது.


 

இத்தகைய சூழலில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஈசியாக வந்து செல்ல ஸ்வப்னாவுக்கு இ-பாஸ் வழங்கிய அதிகாரிகள் யார் என்றும் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்


 








Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்