வங்கிக்கு போகாமலேயே கடன் வாங்கலாம்:HDFC புது திட்டம்

வங்கிக்கு போகாமலேயே கடன் வாங்கலாம்:HDFC புது திட்டம்




பொதுவாகவே வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்குவதற்கு வங்கி தோறும் வாடிக்கையாளர்கள் நாள் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். கடன் பெற ஆகும் காலத்தைப் பார்த்தால் கடனே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு அதிலுள்ள விதிமுறைகளும் சரிபார்ப்புகளும் இருக்கும். இதுபோன்ற சூழலில் வாடிக்கையாளர்கள் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே சுலபமாகக் கடன் பெறும் வசதியை இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான HDFC கொண்டு வந்துள்ளது. நெட் பேங்கிங் மூலமாகவே எளிதில் கடன் பெறும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் வசதியின் மூலமாகவே இக்கடனை வாங்க முடியும். நெட் பேங்கிங் கணக்கை ஓப்பன் செய்து அதில் ‘offers' என்பதை தேர்வு செய்து 'ZipDrive' வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடன் பெறும் தொகை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தவுடன் உடனடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வாகனக் கடன் தொகை டெபாசிட் செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் வங்கிகளுக்குச் செல்வதையும் ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற செயல்முறைகளையும் தவிர்க்கலாம். 24*7 என்ற முறையில் இந்தக் கடன் வசதி கிடைக்கிறது.

தற்போது இந்த உடனடிக் கடன் வசதியானது, 1000 நகரங்களில் கிடைப்பதாகவும், வங்கி அதிகாரிகளைச் சந்திக்காமலேயே கடன் பெறும் இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குப் பெரிதும் உபயோகமாக இருக்கும் எனவும் ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியில் கார் மாடல், எந்த டீலரிடம் கார் வாங்க வேண்டும், கடன் தொகை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை வழங்கியுடனேயே உடனடியாகக் கடன் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே உடனடியாகக் கடன் பெறும் இந்த வசதி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் சில்லறைக் கடன் பிரிவுத் தலைவரான அரவிந்த் கபில் தெரிவித்துள்ளார்.



 







Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்