சமூக அவலங்களை காட்டிக்கொடுத்த கொரோனா: ஐநா தலைவர் காட்டம்!

சமூக அவலங்களை காட்டிக்கொடுத்த கொரோனா: ஐநா தலைவர் காட்டம்!



ஏற்றத்தாழ்வுகளால் நாம் அறுநிலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ், சர்வதேச அளவில் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


அண்மையில் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீஸ் காவலில் வைத்து கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து மக்கள் எல்லா வகையிலும் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒரு விவாதப் பொருளாக மாறியது. அதனுடன், கொரோனாவால் மக்கள் சந்திக்கும் இன்னல்களும் ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில், சமூகத்தின் எலும்புக் கூட்டில் உள்ள முறிவுகளை காட்டிக்கொடுக்கும் ஒரு எக்ஸ்-ரே கருவியாக கோவிட்-19 நோய் வந்துள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நெல்சன் மண்டேலா பிறந்தநாள் விரிவுரை நிகழ்வில் பேசுகையில், “எல்லா இடங்களிலும் இருக்கும் பிழைகளையும், போலிகளையும் கொரோனா காட்டிக்கொடுத்துவிட்டது.

தடையற்ற சந்தைகளால் அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்க முடியும் என்பது பொய். சம்பளமே இல்லாமல் தொண்டுப் பணியாளர்கள் செய்வதெல்லாம் ஒரு வேலையே அல்ல என்பது கற்பனை. இனவெறியில்லாத உலகில் வாழ்கிறோம் என்பது மாயை. நாம் அனைவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம் என்பது கட்டுக்கதை.

வளர்ந்த நாடுகள் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்ள ஏராளமாக முதலீடு செய்கின்றன. ஆனால் ஆபத்து காலத்தில்கூட வளரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கத் தவறிவிட்டன. உலகின் பாதி செல்வத்தை 26 பணக்காரர்கள் மட்டுமே வைத்துள்ளனர். இதுபோக இனம், பாலினம், நிறம், வர்க்கம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் மக்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றனர்.





காலனியத்துவம் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கிறது. உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிலும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் போன்ற அரசியல் நிறுவனங்களிலும் வளரும் நாடுகள், முக்கியமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு இன்னும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. ஐநா பாதுகாப்பு குழு 1940ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் இன்னும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய அதிகாரம் நிறைந்த நாடுகளே உறுப்பினர்களாக இருக்கின்றன.




உச்சத்தில் இருந்துதான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான முதல் படி. வளரும் நாடுகளுக்கு நிறைய உதவிகளை வழங்க வேண்டும். அவர்களின் கடன்களை ரத்து செய்வது உட்பட எல்லா வகையிலும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்