நாளை முதல் ஊரடங்கு கிடையாது.  முதலமைச்சா் அதிரடி உத்தரவு....!

நாளை முதல் ஊரடங்கு கிடையாது.  முதலமைச்சா் அதிரடி உத்தரவு....!


பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க நாளை முதல் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த பெரு நகரம் என்ற பெருமையை பெங்களூரு வைத்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாக தொடங்கினர்.


புதிய மருத்துவ கட்டமைப்பு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் கர்நாடக அரசு எடுக்கவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.







இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி அதிகாலை 5 மணி வரை வரை பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுக்க முழுக்க ஊடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.




இந்த நிலையில் பெங்களூர் மாநகராட்சி சார்பில், கூடுதலாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா தொடர்ந்து தீவிர ஆலோசனைகளை நடத்தி வந்தார். இந்த நிலையில், இனிமேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எடியூரப்பா இன்று கூறுகையில், ஜூலை 22ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. மக்கள் தங்களது பணிக்கு திரும்பவேண்டும். பொருளாதாரம் மிகவும் முக்கியம். பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொண்டு கொரோனா வைரசுக்கு, எதிராகவும் போராட வேண்டும். லாக்டவுன் நிரந்தர தீர்வு கிடையாது. எனவே கண்டைன்மெண்ட் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும். பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் இருக்காது.

 

மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வந்த மக்கள் காரணமாக, இந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. மருத்துவ நிபுணர்கள் 5 வியூகங்களை வலியுறுத்துகிறார்கள். தேடிப்பிடித்தல், கண்டறிதல், பரிசோதனை, சிகிச்சை அளித்தல் மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்துதல் ஆகியவைதான் இந்த ஐந்து விஷயங்கள். அதை கர்நாடக அரசு செய்து, கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 

அதேநேரம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரக்கூடிய வாகனங்களுக்கு எளிதாக நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டு வாகனங்கள் உள்ளே வரலாம் என்பது விதிமுறை. ஆனால், அதில் ஸ்லாட் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்களுக்கு எளிதில் அனுமதி கிடைப்பதில்லையாம்.



Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்