இத்தாலி உணவகத்தில் வேலைக்காாியாக பணியாற்றிய சோனியா இந்திய தலைவியானது எப்படி...?




இத்தாலி உணவகத்தில் வேலைக்காாியாக பணியாற்றிய சோனியா இந்திய தலைவியானது எப்படி...?



சோனியா காந்தியின் இயற்பெயர் எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோ. இவர் 09 டிசம்பர் 1946. இல் இத்தாலியில் உள்ள வெனட்டோவின் லூசியானாவில் ஸ்டெபனோ மற்றும் பவுலா மைனோ ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு. அவரது தந்தை கட்டுமான வணிகம் செய்து வந்தார்.


அன்டோனியா ஒரு பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க சபையை சேர்ந்தவர். இதனால் இவர் கத்தோலிக்க பள்ளியில் படித்தார். 1964 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழி பள்ளியில் சேர்ந்தார்.



கல்லூரி மாணவியாக இருந்தபோதே கேம்ப்ரிட்ஜில் உள்ள வர்சிட்டி ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் பணியாளராக வேலைப்பார்த்து வந்தார். அந்த உணவகத்தில் வேலைப்பார்க்கும்போது அவர் நேரு- இந்திரா காந்தி என்ற சக்திவாய்ந்த குடும்பத்தின் வாரிசான ராஜீவ் காந்தி என்னும் இளம் இந்தியருடன் பழக்கம் உண்டானது.


அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இயந்திர பொறியியல் மாணவராக இருந்தார். இந்த ஜோடி விரைவிலேயே காதலித்து திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தது.


ஆன்டோனியா மைனோ 1968 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை மணந்துக்கொண்டார். பிறகு அவர் தனது பெயரை சோனியா காந்தி என்று மாற்றிக்கொண்டார். அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த அவரது மாமியார் இந்திரா காந்தியை சந்தித்தார்.



முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக ராஜீவ் காந்தி இருந்தாலும் அவர் அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர் பொறியியலிலும் ஆர்வம் காட்டவில்லை. அவர் உண்மையில் வானத்தில் பறக்க விரும்பினார்.


இதனால் அவர் ‘இந்தியன் ஏர்லைன்ஸில்’ ஒரு வணிக விமானியாக ஆனார். அதே நேரத்தில் சோனியா ஒரு இல்லதரசி ஆனார். அதனால் இந்த ஜோடி அரசியலுக்குள் வரவில்லை.


இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் தனது தாயை பின்பற்றி அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 1980 இல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் இறந்தார். இதனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை அரசியலுக்கு வர சொல்லி அழுத்தம் கொடுத்தார்.


ஆனால் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இருவருக்குமே இதில் விருப்பம் இல்லை. இருப்பினும் ராஜீவ் காந்தி சிறிய தயக்கத்துடன் அரசியலில் நுழைய ஒப்புக்கொண்டார்.



1984 இல் பிரதமரான இந்திராகாந்தி படுக்கொலை செய்யப்பட்டார். அவருக்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார். பிரதமரின் மனைவியான சோனியாவுக்கும் அரசியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை.


பிறகு ராஜீவ் காந்தி 1991 இல் படுக்கொலை செய்யப்பட்டார். இதனால் அவரது மனைவியான சோனியா அரசியல் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து அரசியலில் இருந்து விலக முடிவு செய்தார்.


காங்கிரஸிற்கு சரியான தலைமை இல்லாததை கண்ட அவர் அடுத்த ஆண்டில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தா அமர்வில் காங்கிரஸின் முதன்மை உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார்.



1998 இல் கட்சியின் தலைவரானார். 1999 இல் 13வது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


காங்கிரஸ் கட்சி 2004 மக்களவை தேர்தலில் இருந்து மிகப்பெரும் ஒற்றை கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழுமையான பெரும்பான்மையை பெறாததால் அந்த கட்சி பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) என்ற புதிய கட்சியோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


மேலும் அந்த கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்படி இருந்தாலும் அவர் பிரதமராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். எனவே பிரதமராக பணியாற்ற அவர்கள் முக்கிய பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தார்.



2004 ஆம் ஆண்டில் சோனியா காந்தி தேசிய ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு 2005 ஆம் ஆண்டில் ‘தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்’ மற்றும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ ஆகியவற்றை இயற்றுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.


இந்த நிலையில் சோனியா காந்தி மக்களவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அலுவலக ஆலோசனை தொடர்பான அந்த சர்ச்சையிக்கு பின்பு தேசிய ஆலோசனைக்குழு மார் 2006 ஆம் ஆண்டு தேசிய ஆலோசனை குழுவின் தலைவர் பதவியை அலுவலக இலாப நோக்கிற்குள் கொண்டு வர முடியாது என கூறிவிட்டது. இதனால் பின்னர் மீண்டும் இவர் 2010 இல் தேசிய ஆலோசனை குழுவின் தலைவரானார்.


சோனியா காந்தி மே 2006 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இல் தேசிய ஆலோசனை குழுவின் தலைவரான சோனியா காந்தி 2014 வரை தலைவராக பணிப்புரிந்தார்.


ஆனால் 2014 பொது தேர்தலின் போது அவரது கட்சி அதிகாரத்தை இழந்தது. தற்போது அவரது கட்சி இந்தியாவில் எதிர்கட்சியாக இருந்தாலும் இப்போதும் சோனியா காந்திதான் கட்சியின் தலைவராக இருக்கிறார்.







சோனியா காந்தி 1965 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜில் வாழ்ந்தபோது ராஜீவ் காந்தி எனும் இளம் இந்தியரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர் ஒரு சக்தி வாய்ந்த அரசியல் பிண்ணனியை கொண்டவர். இருவரும் மாறுப்பட்ட கலாச்சார பிண்ணனியை கொண்டவர்கள்.


இதனால் ஆரப்பத்தில் இவரது குடும்பத்தினர் இவர்கள் உறவை எதிர்த்தனர். இருப்பினும் ராஜீவ் காந்தியின் வற்புறத்தலால் அவரது பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்.


பிறகு இவர்கள் இருவரும் 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ராகுல் மற்றும் பிரியங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். சோனியா மீண்டும் இத்தாலிக்கு செல்வதற்கு பதிலாக இந்தியாவில் இருக்கவே முடிவு செய்தார். அவர் திரும்ப மறுமணம் செய்து கொள்ளவில்லை.


சோனியா காந்தியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 2 பில்லியன் என கூறப்படுகிறது.


பிரதமா் மோடியை பாா்த்து ரயில்வே ஸ்டேசனில் டீ விற்றவா் என்று கூறும் அரசியல் கட்சியினா் சோனியா காந்தியை பாா்த்து ஓட்டலில் வேலை பாா்த்தவா் என்று யாரும்  கூறுவதில்லை. 


இது என்ன அரசியலோ தொியவில்லை...?


சோனியா காந்தி இத்தாலி நாட்டை சேர்ந்த ஓட்டல் வேலைக்காாி. இவர் 1998 இல் இருந்தே ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ கட்சியில் தலைமை பதவியை வகித்து வருகிறார். 2010 இல் நான்காவது முறையாக அவர் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதனால் 125 வருட காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே நீண்டக்காலம் பணியாற்றிய தலைவா் என்னும் பெயரை சோனியா காந்தி பெற்றார். இது அவாின் கட்சிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் நமது பாரத தேசத்திற்கு பெருத்த அவமானம்....!














Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்