பல்கலைக்கழக தேர்வுகள் கட்டாயம் – தேர்வுகள் நடத்த கல்லூரிகள் ஆதரவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வந்ததனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வுகள் யாவும் தள்ளி வைக்கப்பட்டன.
இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதால் மாணவர்களுக்கு தேர்வு நடத்த மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
இதனால் பல்கலைக்கழக மானிய குழு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என அறிவித்து இருந்தது. இதனால் தற்போது தேர்வு நடத்துவதற்குரிய ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 700 மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் கருத்து கேட்கப்பட்டது. இதில் 560 பல்கலைக்கழக தேர்வினை நடத்த ஆதரவு தெரிவித்து உள்ளது. இதில் 196 பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே தேர்வினை நடத்தி முடித்து விட்டன.
தற்போது மெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதனால் தேர்வு கட்டாயம். தேர்வானது ஆன்லைன் அல்லது எழுத்து மூலமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.