ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசண்ட்... அச்சதில் ஊழியர்கள்!

ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசண்ட்... அச்சதில் ஊழியர்கள்!




நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் காக்னிசண்ட் அலுவலகங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. எனினும், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ில்செய்யப்பட்டுள்ளதாக ஐடி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
 

இதனால் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள காக்னிசாண்ட் அலுவலகங்களில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுதாக அனைத்திந்திய ஐடி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளர் துறைக்கும், இதர அரசு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், சுமார் 18,000 ஊழியர்கள் பிராஜக்ட் இல்லாமல் இருப்பதால் அவர்களில் பலர் பாதிக்கப்படக்கூடும் எனவும் அனைத்திந்திய ஐடி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கத்தின் செயலாளர் சுராஜ் நிதியாங்கா பேசுகையில், “பெங்களூருவில் காக்னிசாண்ட் ஊழியர்களிடமிருந்து எங்களுக்கு சுமார் 20 புகார்கள் வந்துள்ளன. தமிழ்நாடு சங்கத்திற்கு 20 புகார்கள் வந்துள்ளன. காக்னிசாண்ட் ஏராளமான ஊழியர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உலகளவில் காக்னிசாண்ட் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 13,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரயன் ஹம்ப்ரீஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். காக்னிசாண்டுக்கு உலகளவில் 2.9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்