சாத்தான் குளம் கொலைகாரா்களை ‘சத்தியமா சும்மா விடக் கூடாது’ -ரஜினி எச்சரிக்கை!
சாத்தான் குளம் தந்தை மகன் சர்ச்சை மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது. காவல்துறையினரின் அத்துமீறலாலும் மனிதத் தன்மையற்ற செயலாலும் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.
இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணை தொடங்க தாமதமாகும் நிலையில் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாமர மக்கள் முதல் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் காவல்துறையை கண்டித்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் நடிகரும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறிவருபவருமான ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல சம்பவங்களில் கால்துறைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்த ரஜினிகாந்த், தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று பத்து நாள்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது சத்தியமா விடவே கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
.
.