அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் காட்டுவார்களா....?

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் காட்டுவார்களா....?



கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டை பள்ளி ஊராட்சி போத்தி நாயன பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகின்றது ஆனாலும் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படாத நிலையில் உள்ளதால் இந்த பள்ளி வளாகம் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது .

இதனால் இந்த பள்ளி வளாகம் இப்போது இந்த பகுதியில் உள்ள குடிமக்களின் திறந்தவெளி பாராக மாறி உள்ளது அதுவும் இல்லாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதுதால் மழைநீர் தேங்கி சாக்கடையாக காட்சியளிக்கிறது.

 நல்லவேளை இப்போது பள்ளிகள் திறக்கப்படவில்லை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் அவர்களால் ஒழுங்காக கல்வி கற்கும் சூழல் இல்லை எனவே இந்த பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகின்றனர்.

இந்த பகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது இங்கு கடந்த 10 ஆண்டுகளாக திமுகவை சேர்ந்தவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர் இவர்கள் இந்த பள்ளியை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவை சார்ந்த ஒன்றிய துணை செயலாளர் சரவணன் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ளார் அவரும் ஏனென்று கேள்வி கேட்பதில்லை. 

அனைவரும் இப்படியே இருந்தால் இந்த பள்ளி எப்படி உருப்படும்.

மூர்த்தி .  கிருஷ்ணகிரி செய்தியாளர்


Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்