WhatsApp Pay சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது தெரியுமா?- பணம் அனுப்பும் வழிமுறைகள்!

WhatsApp Pay சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது தெரியுமா?- பணம் அனுப்பும் வழிமுறைகள்!

வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன

அனைவருக்குமான வாட்ஸ்அப் பே

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அணுக கிடைக்கிறது. உங்களுக்கு இது இன்னமும் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின்பு இந்த சேவையை பயன்படுத்த முயற்சிக்கலாம்.

160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகள்

குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4 வங்கிகளுடன் கூட்டு சேர்ந்த வாட்ஸ்அப் பே சேவை

வாட்ஸ்அப் சேவையை விரிவுப்படுத்தும் விதமாகவும் பயனர்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாட்ஸ்அப் சேவையானது 10 இந்திய பிராந்திய மொழி பதிப்புகளில் அணுக கிடைக்கிறது.

எப்படி இயக்குவது என்பது குறித்து பார்க்கலாம்

வாட்ஸ்அப் செயலியில் வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சத்தை எப்படி இயக்குவதை என்பது குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சேவைக்குள் நுழைந்தவுடன் அதன் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

பேமெண்ட்ஸ் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்

மூன்று புள்ளிகளை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் பேமெண்ட்ஸ் ஆப்ஷன் காண்பிக்கப்படும் இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் new payments method என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் கட்டண விதிமுறைகளை பின்பற்ற அதில் காண்பிக்கப்படும் accept என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்

அதன்பின் பிற செயலிகள் போல் வெரிஃபை வயா எஸ்எம்எஸ் (Verify Via Sms) என கேட்கப்படும் அதை கிளிக் செய்து எஸ்எம்எஸ் மூலம் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன்பின் தங்களது வங்கியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி பணம் அனுப்பலாம்

பின் டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கு எண்ணையும் வேலிடிட்ட தேதியையும் பதிவிட வேண்டும். அதன்பின் அதில் கேட்கப்படும் terms and condition தீர்மானைத்தை கிளிக் செய்து அங்கீகரிக்க வேண்டும். அதில் காட்டப்படும் வங்கி பெயர்களில் உள்ள பயனர்கள் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு இந்த சேவையை பயன்படுத்தலாம்.

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்