தேர்தல் புறக்கணிப்பு செய்யும் முதல்வர் தொகுதி மக்கள்
சேலம்எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் 38 வருடங்களாக பட்டா கோரி கிடைக்காததால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அயோத்தியாபட்டினம் தாலுகாவிற்கு சேர்ந்த முட்டை கடை காலனி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்?? இலங்கையிலிருந்து பாஸ்போர்ட் மூலம் தமிழகம் வந்து சேலம் மாவட்டம் அயோதியபட்டனம் தாலுகாவிற்கு சேர்ந்த முட்டை கடை காலனியில் கடந்த 38 வருடங்களாக வசித்து வருகிறோம் எங்களுக்கு சரியான சாக்கடை ,கழிப்பிடம் வசதி மற்றும் பட்டா கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர் மேலும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து எங்களுக்கு விரைவில் பட்டா வழங்கக் வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். மேலும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் வரும் சட்டமன்றத் தொகுதி தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என தெரிவித்தனர்.
Arul Meri Salem.