ஓசூர் ஜான்போஸ்கோ பள்ளியில் இலவச சைக்கிள் : பாலகிருஷ்ணாரெட்டி வழங்கினார்.

ஓசூர் ஜான்போஸ்கோ பள்ளியில்  இலவச சைக்கிள் : பாலகிருஷ்ணாரெட்டி  வழங்கினார்.



 ஓசூர் ஜான்போஸ்கோ பள்ளியில் நடந்த விழாவில்,முன்னாள் அமைச்சர் பங்கேற்று 297 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை செல்லும் ரோட்டிலுள்ள புனித ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் ஏஞ்சலா தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் நாராயணன்,மாவட்ட துணை செயலாளர் மதன், முன்னாள் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி அரப் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

டி.இ.ஓ. கோபாலப்பா, ஓசூர் மாநகர அ.தி.மு.க.செயலாளர் நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட நிர்வாகி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணாரெட்டி கலந்து கொண்டு 297 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் இந்த விழாவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு,தவமணி, நந்தகுமார்,நகர பொருளாளர் குமார்,அ.தி.மு.க.பிரமுகர்கள் சந்திரன்,சென்ன கிருஷ்ணன் ,பவானிசங்கர், குபேரன்,சாச்சு பாய்மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்