இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்குக் கொடுத்தது யார் என்று ராகுல் தனது தாத்தாவிடம் (ஜவஹர்லால் நேரு) தான் கேட்க வேண்டும்,
இந்தியா-சீனா பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியதற்கு பதிலடி கொடுத்த உள்துறை இணையமைச்சர் ஜி. கிசான் ரெட்டி "இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்குக் கொடுத்தது யார் என்று ராகுல் தனது தாத்தாவிடம் (ஜவஹர்லால் நேரு) தான் கேட்க வேண்டும், அவருக்கு பதில் கிடைக்கும் ... யார் ஒரு தேசபக்தர், யார் இல்லை, பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள்" என்று கூறினார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்தியா தனது நாட்டின் எல்லையில் ஒரு அங்குலத்தை கூட யாரையும் தொட அனுமதிக்காது. படைகள் விலக்கப்பட்டு வருகின்றன என்று சீன பிரச்சனையை பற்றி விரிவாக பேசினார் .இதனை விமர்சித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பேசுகையில். காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் என்ன நிலைமை என்பது தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார்.பிரதமர் மோடிபிங்கர்-4 பகுதி நமது பிராந்தியம். இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில் இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பிராந்தியத்தை பிரதமர் மோடி ஏன் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார்?உண்மை என்னசீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உஎன்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.ராகுல் விமர்சனம்பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் நமது ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார். ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இவ்வாறு செய்வதை இந்தியாவில் உள்ள யாரும் அனுமதிக்கக்கூடாது." இவ்வாறு ராகுல் காந்தி கடுமையாக பேசினார்.
அமைச்சர் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உள்துறை இணையச்சர் ஜி. கிசான் ரெட்டி "இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவுக்குக் கொடுத்தது யார் என்று ராகுல் தனது தாத்தாவிடம் (ஜவஹர்லால் நேரு) தான் கேட்க வேண்டும், அவருக்கு பதில் கிடைக்கும் ... யார் ஒரு தேசபக்தர், யார் இல்லை, பொதுமக்கள் அனைத்தையும் அறிவார்கள்.இந்தியா பதிலடிஇந்தியாவை யார் தாக்கினாலும அதற்கு எதிராக நாங்கள் வலுவாக போராடி பதிலடி கொடுப்போம். உலகம் அதைக் கண்டுள்ளது. நம் நாட்டை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கில் உள்ள (பாகிஸ்தான், சீனா) நாடுகளுக்கும் எங்கள் அரசாங்கம் காட்டியுள்ளது.ராகுல் காந்தியின் கருத்து மற்றும் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு ஆகியவை அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. ராகுல் காந்தி எதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை" என்றார்.'! (?)