ஒரே குறி "அவர்" மட்டும்தானாம்.. வேற யாருமே இல்லை.. சசிகலாவின் = அடுத்த மூவ்

 ஒரே குறி "அவர்" மட்டும்தானாம்.. வேற யாருமே இல்லை.. சசிகலாவின் = அடுத்த மூவ் 



 இப்போதைக்கு சசிகலாவின் ஒரே குறி திமுகதான் என்பது தெரியவருகிறது.. இனி தேர்தல் வரை திமுகவுக்கு டஃப் தரும் வேலையில் சசிகலா தீவிரமாக இறங்குவார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சசிகலா இப்போது வெளியே வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.. இன்றைக்கு முழுவதும் அவர் ரெஸ்ட்டில் இருப்பதால், அநேகமாக நாளை முதல்தான தன்னுடைய ஆலோசனையை ஆரம்பிப்பார் என்று தெரிகிறது.

கட்சி பிரமுகர்களின் லிஸ்ட் ஒன்றையும் கையில் வைத்துள்ளதாகவும், அதன்படி, முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து இனி பேசுவார் என்றும் சொல்கிறார்கள். 

 நேற்றுகூட, ஒருசில அமைச்சர்களிடம் சசிகலா போனில் பேசியதாக தகவல்கள் கசிந்தது.. அந்த அமைச்சர்களிடம்கூட உருக்கமாகவும், உரிமையாகவும் பேசியிருக்கிறார்.. 

"நாம எல்லாரும் ஒன்றாக இருந்தால்தானே திமுகவை வீழ்த்த முடியும்? இல்லாவிட்டால் நம் கட்சியை எளிதாக அழித்துவிடுவார்களே" என்று ஆதங்கப்பட்டாராம். இணைப்பு அதுமட்டுமல்ல, தேர்தல் தேதிக்கு முன்னாடியே அதிமுக என்ற ஒரே குடையின்கீழ் அனைவரும் இணைய வேண்டும் என்பதே சசிகலாவின் அடிமனசு எண்ணமாக இருக்கிறதாம்.

 அப்படி கட்சிகள் இணைய வேண்டும் என்றால், அதற்கு முழு ஒத்துழைப்பு பாஜக தரும் அல்லது அதிமுக தலைமைக்கு அழுத்தம் தரலாம் என்கிறார்கள். 

 யார் யார் சசிகலாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை தமிழக உளவுத்துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறதாம்.. அப்படி யாராவது இருந்தால் அவர்களை பற்றின தகவல் ஆதிமுக தலைமைக்கு பறக்கிறதாம்.. உடனே அதிமுக தலைமையும், சம்பந்தப்பட்ட புள்ளிகளை அழைத்து சமாதானம் பேச ஆரம்பித்துவிடுகிறதாம். இருந்தாலும் இவைகளினால் அதிக பலன் கிட்டாது என்கிறார்கள்.

திமுகதான் ஒரே குறி என்று சசிகலா கங்கணம் கட்டி கொண்டிருந்தால், சசிகலாவால்தான் நமக்கு ஆதாயம் என்று ஸ்டாலின் தெம்பாக சொல்லி வருகிறார்.. அவங்க பார்த்துப்பாங்க என்று ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஸ்டாலின் பேச ஆரம்பித்துள்ளார்..